கௌரி நல்லநேரத்தில் நாளைய (6ம் தேதி) நல்ல நேரம் எதுன்னு தெரிஞ்சுக்கங்க..!

கௌரி நல்லநேரத்தில் நாளைய (6ம் தேதி) நல்ல நேரம் எதுன்னு தெரிஞ்சுக்கங்க..!
X

gowri nalla neram tomorrow-கௌரி நல்லநேரம் (கோப்பு படம்)

Gowri Nalla Neram Meaning in Tamil-பஞ்சாங்கத்தில் நல்ல நேரம் என்பது நாள்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கும். அது என்ன கௌரி நல்லநேரம்? தெரிஞ்சுக்கலாம் வாங்க.

கெளரி நல்ல நேரம் என்பது என்ன என்பதை இந்த கட்டுரை மூலமாக தெரிந்துகொள்ளலாம்.

Gowri Nalla Neram Meaning in Tamil-ஒரு நாள் என்பது பொழுது விடியலில் இருந்து தொடங்குகிறது. அந்த நாள் நல்ல நாளாக அமைய வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமும். நாள் செய்வதை நல்லோர் கூட செய்ய மாட்டார்கள்!" என்று ஒரு பழமொழி நமது வழக்கத்தில் உள்ளது. அந்த அளவிற்கு நாள் எனபது முக்கியம் வாய்ந்தது. அந்த நாளில் வரும் நல்ல நேரம் என்னும் கால அளவு அதை விட முக்கியத்துவம் வாய்ந்தது. நல்ல நாளில், நல்ல நேரம் பார்த்து செய்யக் கூடிய காரியங்கள் எல்லாம் நிச்சயம் பெரும்பாலும் வெற்றி பெறும்.


நல்ல நேரம் என்பது என்ன?

ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுப கிரகங்களின் பார்வை பூமிக்கு அதிகமாக கிடைக்கிறது. அந்த நேரத்தை முன்பே கணக்கிட்டு சாஸ்த்திர நூல்களில் கொடுத்து இருப்பார்கள். அது காலை, மாலை என இருவேளைகளில் வரும். அந்த நேரத்தில் தீய கிரகங்களின் அல்லது தீய சக்திகளின் ஆற்றல் குறைந்து இருக்கும். இதுவே நல்ல நேரம் என்று குறிப்பிடப்படுகிறது.

இதில் கௌரி பஞ்சாங்கம் அல்லது கௌரி நல்ல நேரம் என்பது ஆதி காலத்தில் இருந்த ஒரு முறை ஆகும். அதாவது கிருத யுகத்தில் இருந்தே அது இருந்து வருவதாக நம்பிக்கை பலரிடமும் இருந்து வருகிறது. அதாவது பாற்கடலை கடையும் முன்பிருந்தே கௌரி பஞ்சாங்கம் இருந்துள்ளது என்பது அதற்கான சான்றாக கூறுகிறார்கள்.


இராகு காலம், எம கண்டம் எப்படி வந்தது?

பாற்கடலை கடைந்த சமயத்தில் இராகு என்னும் அரக்கன் திருமாலின் அவதாரமான மோகினியின் சூழ்ச்சியை புரிந்து கொண்டு தேவர்கள் போல வேடமிட்டு திருட்டுத் தனமாக அமிர்தம் பருகி விடுகிறான். இதனால் கோபமடைந்த திருமால் சுதர்சன சக்கரத்தை கொண்டு அவன் தலையை கொய்ய, அமிர்தம் உண்ட இராகுவின் தலை மற்றும் உடல் இரண்டாகப் பிரிந்து இராகு / கேது என இரண்டாக ஆகின்றன. பின்னர் இவர்கள் தவம் செய்து கிரக பதவியையும் அடைந்து விடுகின்றனர்.

இந்த சமயத்தில் தான் காலக் கணக்கில் ஒரு குழப்பம் வருகிறது. சூரியன் முதல் சனி வரையிலான முக்கியமான ஏழு கிரகங்களுக்கு நாட்களை பிரித்து கொடுத்து விட்ட நிலையில், இராகு, கேதுவிற்கு எதை கொடுப்பது என்ற பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இறுதியாக சிவபெருமான் ஒவ்வொருவர் நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை இராகு, கேதுவுக்கு தர உத்தரவிடுகிறார். அந்த நேரத்தில், அந்த நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இராகு, கேது வலிமையுடன் செயல்படுவார்கள். அந்த குறிப்பிட்ட நேரமே இராகு காலம், எம கண்டம் எனப் பெயர் பெற்றது.

அப்படியானால் மக்களுக்கு எந்த நேரம் தான் நல்ல நேரம்? எப்போதுதான் நன்மை நடக்கும்? மக்களுக்கு நன்மை கிடைக்கும் உகந்த நேரம் எது? என்ற குழப்பத்தில் உள்ளவர்களுக்கு பதிலாக வந்ததுதான், கௌரி நல்ல நேரம்.

கௌரி நல்ல நேரம் என்றால் என்ன?

கெளரி நல்ல நேரம் விளக்கம்

கௌரி நல்ல நேரம் என்பது கௌரி பஞ்சாங்கத்தில் பிரிக்கப்பட்டுள்ள நல்ல நேரம் ஆகும். ஒரு நாளை 16 முகூர்த்தங்களாக பிரித்தால் பகல் பொழுதிற்கு 8 முகூர்த்தமும், இரவு பொழுதிற்கு 8 முகூர்த்தமும் என 16 முகூர்த்தங்கள் வருகின்றன. ஒரு முகூர்த்த நேரம் என்பது 1.30 மணி நேரமாகும். உத்தி, அமிர்தம், ரோகம், லாபம், தனம், சுகம், விஷம், சோரம் என்று எட்டு வகையான முகூர்த்தம் கௌரி பஞ்சாங்கத்தில் இருக்கின்றன.

இந்த முகூர்த்தங்களில் அமிர்தம், லாபம், தனம், சுகம், உத்தி என்ற வேளைகளில் சுபகாரியங்களை செய்யலாம். எனினும், இதிலும் கூட ஒரு விதி விலக்கு உண்டு. அதன்படி கௌரி பஞ்சாங்க அட்டவணை நேரத்தில் சுப நேரம் என்று இருக்கிறது.

ஆனால், அந்த சமயத்தில் ராகு காலம், எம கண்டம், குளிகை காலம் போன்றவை வந்தால் அது கௌரி பஞ்சாங்கத்தில் நல்ல வேளைகள் என்று குறிப்பிட்டு இருந்தாலும் கூட அவசியம் அந்த நேரங்களை தவிர்த்து விடுவது நல்லது.

நாளைய கௌரி நல்ல நேரம்

நாளை, 06-06-2023, செவ்வாய், கௌரி நல்ல நேரம் : 10:30 AM - 11:30 AM, 7:30 PM - 8:30 PM.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி