பூமியின் மையத்தில் வசிக்கும் கட்டீல் துர்கா பரமேஸ்வரி..!
கட்டீல் பரமேஸ்வரி கோயில் தேரோட்டம்.(கோப்பு படம்)
கட்டீல் என்றால் இடுப்பு நடு பகுதி மையம் என்பது அர்த்தம். கோயில் ஆற்றின் நடுவில் அதன் இடுப்புப் போன்ற பிரதேசத்தில் அமைந்துள்ளதால் இந்தப்பெயர் பெற்றது. கடி என்பது மையம் ஈல் என்பது பூமி. பெரிய பாறையாய் மாறி அசுரனை வென்றதால் இன்றும் கோயிலின் நடுவே பாறையைப் காணமுடியும்.
ஜாபாலி முனிவர் மக்களை பஞ்சத்தில் இருந்து காக்க காமதேனுவின் மகள் நந்தினியை ஆறாக மாற்றி சுபிக்ஷத்தை தந்த இடத்திலே துர்கா பரமேஸ்வரியின் திருக்கோயில் அமைந்துள்ளது.
பூமியின் மையத்திலே துர்கா பரமேஸ்வரி இருப்பதால் கடீல் துர்கா பரமேஸ்வரி என அழைக்கப்படுகின்றாள். பிரமனின் வரம் பெற்ற அருணாசுரன் எனும் அரக்கனைக் கொன்று மக்களைக் காத்தவள்.
தேவியின் சக்தி அலாதியானது. அவள் மக்களின் வாழ்க்கைக்கு புத்துயிர் கொடுக்கிறாள் மற்றும் அவளுடைய தெய்வீக ஆற்றலை ஊற்றுகிறாள். இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேற்றப் பெறுவர் என்பது ஐதீகம். இப்போது கேசவ் ஜியின் கரங்களிலே ஓவியமாய் வந்து நம்மை அருள்பாலிப்பவள் கண்ணெதிரே திவ்யமாக காட்சியளிக்கின்றாள் தங்க கவசத்திலே ‘‘பச்சைப் புடவையிலே, மல்லிமலர் சரங்களின் நடுவே தங்கமாய் ஜொலிக்கின்றாள்’’ அவரது கண்கள் காருண்ய மழை பொழிகின்றது. வெள்ளி மண்டபத்தின் நடுவே விஷ்ணு துர்கா பரமேஸ்வரியாய், சங்கு சக்கர தாரியாக, அற்புத தரிசனம்.
ஒரு முறை சென்று தரிசித்து வருவோமா..?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu