God Tamil Quotes-காற்றில் கரைந்த கற்பூரம் போல இறைவன், இதயத்தில் வாழ்கிறான்..!

இறைவன் இயற்கையின் வடிவங்களாக நமக்கு காட்சி அளிக்கிறான். வானாக, மண்ணாக, காற்றாக, கடலாக விரிந்து பரந்து மனதுள் பொதிந்து கிடக்கிறான்.

HIGHLIGHTS

God Tamil Quotes-காற்றில் கரைந்த கற்பூரம் போல இறைவன், இதயத்தில் வாழ்கிறான்..!
X

god tamil quotes-இயற்கையின் வடிவங்களாக காட்சி தரும் கடவுள் (கோப்பு படம்)

God Tamil Quotes

மனிதனை நெறிப்படுத்தும் ஒரு சிறந்த வழி ஆன்மீகம். ஆன்மீகம் என்பது ஆத்மாவை சுயபரிசோதனை செய்துகொள்ளும் ஒரு புத்தகம். அந்த புத்தகம் வான் வரை விரிந்து பறந்து கிடக்கிறது. மனதை பண்படுத்தும் கல்வி. அறிவை புகட்டும் ஆசான். ஒழுக்கம் கற்றுத்தரும் தந்தை. அன்பினை பருகத்தரும் தாய். இப்படி ஆன்மிகம் வாழ்வின் ஒழுக்கத்தை பாதைக்காட்டும் வழிகாட்டி.

அது கடவுள் எனும் ஆசிரியர் எழுதிய புத்தகம். அந்த புத்தகம் காட்டும் வழியில் வாழ்க்கைப்பயணம் தொடர்கிறது. இதோ கடவுள் குறித்த மேற்கோள்கள்.

God Tamil Quotes

நீ இழந்ததை நினைத்து வருந்தினால் இருப்பதையும் இழந்து விடுவாய், நீ இருப்பதை நினைத்து மகிழ்ந்தால் இழந்ததையும் அடைந்து விடுவாய்.!!

உறவுகளோடு இருக்கும்போது இறைவனின் பார்வை உன் மீது இருக்கிறது என்று மகிழ்ச்சியாக இரு. தன்னந்தனியாக நிற்கும்போது இறைவனே உன்னோடு இருக்கிறான் என்று நம்பிக்கையோடு இரு!

உங்களையும் இறைவனையும் இணைக்கும் ஊசியாக குரு இருக்கின்றார்.. நூலாக நீங்கள் அவரை பின்தொடர்வதின் மூலமே இரண்டற கலக்க முடியும்.

பார்ப்பவன் என்ன நினைப்பான் என்று பயத்துடன் வாழாதீர்கள். படைத்தவன் என்ன நினைப்பான் என்று பயந்து வாழுங்கள். அதுதான் வாழ்க்கை ...

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

God Tamil Quotes

துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையை, இன்பங்களாக மாற்ற வேண்டுமானால்.. அனைத்தையும் ரசிக்க கற்றுக்கொள்..!

இறைவனின் கருணை உள்ளம் தான்.. கொசுவின் கொடுக்கில் தேளின் விஷம் வைக்கப்பட வில்லை என்பது...

கடவுள் இருப்பிடம் கல்லிலோ, மரக் கட்டையிலோ, மண்ணிலேயோ இல்லை. மனிதர்களின் உணர்ச்சிகளிலும் எண்ணங்களிலும்தான்...!

இறைவா எந்த மனிதனிடத்தில் துயரத்தை சொன்னாலும் கேலி செய்வான். நீ அவற்றை பொறுமையாக கேட்கவேண்டும் என்றுதான் உன்னை கல்லாக படைத்திருக்கிறார்கள் !!!

- கண்ணதாசன்

God Tamil Quotes

கடவுள் நம் பக்கம் இருக்கிறாரா என்பதில் நான் அக்கறை கொள்ளவில்லை, என்னுடைய அக்கறையில் பெரும்பகுதி கடவுள் பக்கமே உள்ளது கடவுள் எப்பொழுதுமே சரியானவர்.

கடவுளை நம்புவது நம்பிக்கை உன்னை நீ நம்புவது தன்னம்பிக்கை

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்.... அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.

- கவிஞர் கண்ணதாசன்

நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அப்படி நம்மை செய்து கொள்வதற்கான ஆற்றலும் நம்மிடம் உள்ளது.

கருணையோடு இருப்பவர்கள் எல்லாம் கடவுளின் மறுபிறவிகளே

பேசும் வார்த்தைகளில் கவனமாய் இருந்தால்.. செல்லும் பாதையில் இன்னல்கள் குறையும்....

காரணம் இல்லாமல்.... கவலை கொள்ளாதே காரணம் இருந்தாலும்.... கலக்கம் கொள்ளாதே.... எதுவும் கடந்து போகும்... இதுவும் கடந்து போகும்..

தர்மத்தின் வழி செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையுமப்பா.

- அகத்தியர்

God Tamil Quotes

கடவுள் வரம் எல்லாம் தரமாட்டார். சந்தர்ப்பம் தான் தருவார். அதை வரம் ஆக்குவதும், சாபம் ஆக்குவதும் உன் கையில்தான் உள்ளது...!

உள்ளது எதுவோ அதை இறைவன் கொடுத்ததாக எண்ணி மகிழ்ச்சியாக இரு....! இல்லாதது எதுவோ அது இனிமேல் இறைவன் கொடுப்பான் என்று நம்பிக்கையோடு இரு..! |

கவலைகளை அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.. இனி கடவுளை அவள் பார்த்துக்கொள்வாள்..

உன்னை விட உனது பிரச்சனைகளை பற்றி உன்னை படைத்தவனுக்கு நன்றாகத் தெரியும்... அவன் மீது முழு நம்பிக்கை வை, அவன் உன்னை காப்பான்....

God Tamil Quotes

எப்பொழுதெல்லாம், எங்கெல்லாம் அநீதி தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் அங்கெல்லாம் நான் அவதரிப்பேன். அநீதியை அழிப்பேன்!

உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே... உனக்கு துணையாக இருப்பவர் எவ்வளவு பெரிய கடவுள் என்று சோதனையிடம் சொல்...!

நினைப்பவை எல்லாம் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் நல்ல முறையில் நடக்கும்..! கடவுள் ஆசைப்பட்டால் மட்டும்..!!

நஞ்சு கூட நன்மை பயக்கும் நமசிவாய நாமம் போற்றினால் !!

கடவுள் எழுதி முடித்துவிட்ட நாடகத்துக்கு நாம் தினமும் போடுகின்றோம் வேஷம்!

God Tamil Quotes

கடவுள் நம்பிக்கை உள்ளவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. உனக்குப் பயம் ஏற்பட்டால், அது கடவுள் மேல் உனக்கிருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது.

போகும் வழியெல்லாம் அன்பை விதைப்போம். எவரேனும் என்றேனும் அறுவடை செய்யட்டும்..!

நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

உடலில் உயிர் இருக்கும் போதே ஈசனை ஆற தழுவிக்கொள் உன் ஆன்மாவுக்கு அவனை ஆற தழுவும் பாக்கியம் கிடைக்காது ஆன்மா உடல் இல்லாதது உணர்வு இல்லாதது அவனை உணர தான் இவ்வுடல் படைக்கப்பட்டிருக்கிறது

God Tamil Quotes

சிந்தனையற்ற தனிமை வேண்டும் மனம் மரத்திட வேண்டும். தன்னிலை மறந்திருக்க வேண்டும் மயக்கம் அறுத்திட வேண்டும். உள்ளொளி பெருக வேண்டும் உண்மை நிலை அறிய வேண்டும். உன்னுடன் கலக்க வேண்டும் சிவமாகவே மாறிட வேண்டும்...

பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே

- இராமலிங்க அடிகளார்

பக்தி என்பது நம் ஆசைகளை கட்டுப்படுத்த தானே தவிர, நம் ஆசைகளை நிறைவேற்ற அல்ல...

படைத்தவன் துணை இருக்க.. அடுத்தவன் துணை எதற்கு..?

God Tamil Quotes

"சாவி" இல்லாத பூட்டை "மனிதன்" உருவாக்குவதில்லை ! அதுப்போல "தீர்வு” இல்லாத பிரச்சனைகளை "இறைவனும்" அனுமதிப்பதில்லை !

நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்.

ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.

அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்!

என் இயேசு மட்டுமே அறிவார்...... என் தாய்க்கும் நண்பனுக்கும் தெரியாத சில கண்ணீர் துளிகளை!

Updated On: 13 Feb 2024 3:12 PM GMT

Related News

Latest News

 1. வீடியோ
  எ.பழனிசாமி ஆட்சியா நடந்துச்சு ? கல்லாப்பெட்டி கம்பெனி நடந்துச்சு !#ttv...
 2. இந்தியா
  செல்போன் இருந்தா..நீங்களும் தேசிய படைப்பாளி விருது வாங்கலாம்..!
 3. லைஃப்ஸ்டைல்
  Funny Food Quotes In Tamil உணவுக்கு முன் பசியுடன் இருப்பதை விட ...
 4. வீடியோ
  EPS-ஐ ஓட ஓட விரட்ட வேண்டும் | தொண்டர்களுக்கு உத்தரவுபோட்ட OPS |...
 5. வீடியோ
  MGR வகுத்த சட்டவிதிகள் ! மாற்றியமைத்த பழனிசாமி !#ops #OPS #OPSspeech...
 6. நாமக்கல்
  ரூ. 57.22 லட்சம் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய ராஜேஷ்குமார்...
 7. லைஃப்ஸ்டைல்
  Kapam Quotes In Tamil ஆன்மாவின் ஆழத்திலிருந்து எழும் முழக்கமே...
 8. காஞ்சிபுரம்
  ஸ்ரீ புஷ்பவள்ளி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயில்
 9. வீடியோ
  🔴 LIVE | மதுராந்தகம் & செய்யூர் சட்டமன்றத்தில் அண்ணாமலை...
 10. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம்