/* */

விநாயகர் சதுர்த்தி: பிள்ளையாரை எதில் செய்யலாம்?

உங்கள் வீட்டில் பிள்ளையாரை எந்த பொருளால் பிடிக்க போகிறீர்கள்? எவ்வாறு பிடித்தால், என்ன மாதிரி பலன் அமையும் போன்ற விபரங்கள் உங்களுக்காக

HIGHLIGHTS

விநாயகர் சதுர்த்தி: பிள்ளையாரை எதில் செய்யலாம்?
X

இன்று விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உங்கள் வீட்டில் பிள்ளையாரை எந்த வஸ்துவால் பிடிக்க போகிறீர்கள் எவ்வாறு பிடித்தால், என்ன மாதிரி பலன் அமையும்?

  • மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்
  • குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்
  • புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும். வியாபாரத்தைப் பெருக வைப்பார்
  • வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்
  • உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்
  • வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்
  • விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
  • சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
  • சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.
  • வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
  • வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.
  • சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.
  • பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்
  • கல் விநாயகர்- வெற்றி தருவார்
  • மண் விநாயகர்- உயர் பதவிகள் கொடுப்பார்.

எப்படி சொல்லப்பட்டிருந்தாலும், விநாயக சதுர்த்தி அன்று மண்ணால் பிடிக்கப்பட்ட பிள்ளையாரைத்தான் பூஜையில் வைத்து வழிபடுகிறோம்.

மண்ணில் பிறந்தவர்கள் எல்லோருமே ஒரு நாள் மண்ணிற்குள்தான் அடங்குவோம் என்னும் மிகப் பெரிய தத்துவத்தை நாம் எல்லோரும் உணர்ந்து கொள்ளத்தான் களிமண்ணால் செய்த பிள்ளையாரை வாங்கி வந்து, பூஜித்துவிட்டு, கடலிலோ, குளத்திலோ மண்ணோடு மண்ணாகக் கரைத்து விடுகிறோம்.

விநாயகருக்கு கொழுக்கட்டை,மோதகம் நைவேத்தியம் செய்வது ஏன்?

விநாயகர் சதுர்த்தி நாளில், பிள்ளையாருக்கு செய்யப்படும் பிரசாதங்களில் முக்கியமானது, 'மோதகம்" மற்றும் கொழுக்கட்டை. தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவால் செய்யப்படும் இந்த நிவேதன பொருளில் ஒரு உண்மை உள்ளது.

மோதும் அகங்கள் இருக்கக்கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தி தான் மோதகத்தைப் படைக்கின்றோம்.

மேல் தோலாக இருக்கும் மாவு பொருள், அண்டம்;. அதன் உள்ளே இருக்கும் பூரணம், பிரம்மம். நமக்குள் இருக்கும் பூரணம் போன்ற நல்ல பண்புகளை மூடி மறைப்பது, மாயை. இந்த மாயை-யை அகற்றிவிட்டால், பூர்ணத்துவமான நல்ல பண்புகள் வெளியாகும். இதுவே, கொழுக்கட்டை உணர்த்தும் தத்துவம்.

கொழுக்கட்டையின் கூர்மையான முன்பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதை தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதை தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதை சொல்லாமல் சொல்கிறது.

விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை மற்றும் அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு கணபதியின் அருளைப் பெறுவோம். எல்லாம் வல்ல விநாயக பெருமானின் அருள் உங்கள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும்.

Updated On: 31 Aug 2022 1:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்