கிருஷ்ணலீலைகள் தெரியும்... விநாயகர் லீலை தெரியுமா?

கிருஷ்ணலீலைகள் தெரியும்... விநாயகர் லீலை தெரியுமா?
X

கிருஷ்ணலீலைகள் தெரியும்... விநாயகர் லீலை அறிவோம்.

நம் எல்லோருக்கும் கிருஷ்ணனின் லீலைகள் பற்றி முழுமையாக தெரியும். விநாயக பெருமானின் லீலைகள் தெரிந்து கொள்ளலாம்.

குபேரன் தன்னிடம் இருக்கும் செல்வத்தை கொண்டு தலைக்கனத்துடன் இருந்தார். ஆனால் அவரின் மனைவி பத்ராவுக்கோ கணவனின் செயல் பிடிக்கவில்லை. குபேரன், "நமக்குத்தான் எவ்வளவு செல்வங்கள். இந்த பிரபஞ்சதுலயே நான்தான் பணக்காரன்". சுவாமி, செல்வம் நம் இறைவன் குடுத்தது. இருக்கட்டும் பத்ரா, இப்போது நான்தானே அதிபதி இருந்தாலும் நான் என்ன சொல்கிறேன் என்றால் ...

"நான் சந்தோஷமாக இருக்கிறேன். என் சந்தோஷத்தை கெடுக்காதே. நான் அனைவரையும் விருந்துக்கு அழைத்து என்னுடைய பிரபாவத்தை காட்ட போகிறேன்". குபேரன் பலரையும் அழைத்தார். கடைசியில் கைலாயத்திற்கு சென்றார்.

கைலாயத்தில், குபேரன் (மனதில்), என்ன இது கைலாயத்தில் ஈசனும் தேவியும் ஒரு சிறு இடத்தில் அல்லவா இருக்கிறார்கள். இது என்னுடைய குபேர மாளிகையின் அறையின் சிறு பகுதி ஆயிற்றே....

சிவபெருமான் அருகில் வந்ததும், எம்பெருமானே.... வாருங்கள் குபேரரே. என்ன இந்த பக்கம்? நான் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருக்கிறேன். அனைவரும் வருகை புரிகிறார்கள். தாங்களும் வந்தால் நன்றாக இருக்கும். இன்று எனக்கு வேலை உள்ளதே குபேரா. அப்படி சொல்லாதீர்கள். நீங்களும் தேவியும் கட்டாயம் வர வேண்டும். வந்து விருந்தை சிறப்பிக்க வேண்டும்.

சரி ஒன்று செய்யலாம். விருந்து என்றால் என் மகன் விநாயகனுக்கு பிடித்த விஷயமாகும். அதனால் என் மகன் விநாயகன் வந்து விருந்தை சிறப்பிப்பான். வரட்டும் வரட்டும். அவரை போதும் போதும் என்னும் அளவுக்கு உபசரிக்கிறேன். குபேரனின் கர்வத்தை சிவபெருமானும் பார்வதி தேவியும் கவனித்தனர். சிவபெருமான் விநாயக பெருமானை அழைத்தார், மகனே விநாயகா, தாம் சென்று குபேரன் விருந்தை சிறப்பித்து வா. சிறப்பாக காரியத்தை முடிப்பாயாக என்றார்.

விநாயக பெருமான் அதன் உள்ளர்த்ததை எளிதாக புரிந்து கொண்டார். வைகுண்டத்தில் நாராயணன் சிரித்தார். லட்சுமி தேவி அவரை பார்த்து, சுவாமி, ஏன் சிரிக்கிறீர்கள்? இன்று என் மருமகன் விநாயகன் லீலை புரியபோகிறான். அந்த குறும்பு விளையாட்டை ரசிக்க போகிறேன். நானும் பார்க்கிறேன் சுவாமி. வழக்கமாக தாங்கள் தான் லீலை புரிவீர்கள். இன்று என் மருமகனின் லீலையை பார்க்கிறேன்.

குபேர மாளிகையில்... குபேரன், அனைவரும் சாப்பிடுங்கள்.. எல்லாரும் போதும் போதும் என்கிற அளவுக்கு சாப்பாடு போடுங்கள். கர்வம் தலைக்கு ஏறியது குபேரனுக்கு. இன்றைய முக்கிய விருந்தினர் விநாயக பெருமானுக்கு சாப்பாடு போடுங்கள். சாப்பாடு பரிமாறப்பட்டது. கணநாதர் லீலையை ஆரம்பித்தார். சாப்பாட்டை உடனடியாக சாப்பிட்டு முடித்தார். பசிக்கிறது என்றார். குபேரன் அலட்சியமாக, அவரை சீக்கிரம் கவனியுங்கள். கணநாதர் மறுபடியும் பசிக்கிறது என்றார். மறுபடியும் பராமரிக்கப்பட்டது . மறுபடியும் மறுபடியும் இதே லீலை நடந்தது. சாப்பாடு காலியானது. குபேரனுக்கு வியர்த்து கொட்டியது.

கணநாதர் போலி கோபத்தை காட்டினார். பசிக்கிறது. சீக்கிரம் சாப்பாடு கொண்டு வாருங்கள். பக்கத்து கிராமத்தில் இருந்து சாப்பாடு கொண்டு வரப்பட்டு அதுவும் தீர்ந்தது. இப்பொழுது கணநாதர் உக்கிரமனார். எனக்கு பசிக்கிறது. சாப்பாடு கிடைக்குமா கிடைக்காதா. என்ன விருந்து வைக்கிறாய். என் பசியை தீர்த்து வைக்க முடியவில்லை உன்னால் என்று கணநாதர் சீறியதும், குபேரன் பதற்றத்துடன், கணநாதா, சாப்பாடு தீர்ந்து போனது. சாப்பாடு இல்லையா. இதுதான் உன் விருந்தா. சாப்பாடு இல்லை என்றால். உன்னை சாப்பிடுகிறேன் என்று சொல்லி குபேரனை நோக்கி சென்றார். குபேரன் அலறி அடித்து கொண்டு சிவபெருமானின் திருவடிகளில் விழுந்தான்

குபேரன், எம்பெருமானே என்னை விநாயகரிடம் இருந்து காப்பாற்றுங்கள். என்னவாயிற்று குபேரா, விருந்து கோலாகலமாக நடைபெற்றதா? எம்பெருமானே, விளையாடாதீர்கள். நான் என் தவறை உணர்ந்து விட்டேன். இந்த செல்வம் அனைத்தும் தாங்கள் எனக்கு போட்ட பிச்சை என்பதை மறந்தேன். என் கர்வம் அடங்கியது. தயவு கூர்ந்து என்னை காப்பாற்றுங்கள்.

சிவபெருமான் சிரித்தார். சிவபெருமான் பார்வதி தேவியை பார்த்தார். பார்வதி தேவி தயிர் சாதத்தை குபேரனிடம் குடுத்தார். குபேரா, இதோ இந்த தயிர் சாதத்தை விநாயகரிடம் குடு. தேவி, அவ்வளவு சாப்பாடு கொடுத்தும் விநாயகருக்கு போதவில்லை. இந்த தயிர் சாதம் அவருக்கு பத்துமா???

குபேரா, நீ ஆணவத்தில் எவ்வளவு கொடுத்தாலும் விநாயகனுக்கு பத்தாது. ஆனால் அன்போடும் பக்தியோடும் அவனிடம் சரணடைந்து ஒரு பருக்கை கொடுத்தாலும், அவனுக்கு பசி அடங்கிடும்.

குபேரனுக்கு புரிந்தது. விநாயக பெருமானிடம் தயிர் சாதத்தை கொடுத்தார். விநாயகன் மகிழ்ச்சி அடைந்தார். கணநாதருக்கு பசி அடங்கியது. விநாயக பெருமானும் குபேரன் திருந்தியதை உணர்ந்து அவரை ஆசிர்வதித்தார். குபேரன் ஆணவத்தை கழற்றி வைத்து விட்டு நல்ல எண்ணத்துடன் சென்றான்.

Next Story