Gana Porutham-கண பொருத்தம் என்றால் என்ன? அது இருக்கணுமா?

gana porutham-திருமண கண பொருத்தம் (கோப்பு படம்)
Gana Porutham
கணப் பொருத்தம்
திருமணத்திற்கு பொருத்தம் பார்க்க முயன்றால் அனேக விதமான பொருத்தங்களை பார்ப்பது சிரமம். ஆயினும் அவைகளில் பொதுவாக பத்து பொருத்தங்களை பார்ப்பது வழக்கத்த்தில் உள்ளது.அவற்றுடன் மேலும் இரண்டு பொருத்தங்கள் சேர்த்து பன்னிரண்டு பொருத்தங்கள் தற்காலத்திலும் திருமணம் நிச்சயிக்கும் முன் பார்க்கப்படுகின்றது.
Gana Porutham
பன்னிரண்டு திருமண பொருத்தம் – தினப்பொருத்தம், கணப் பொருத்தம்: மகேந்திர பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம் ,வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் வேதைப் பொருத்தம், நாடிப் பொருத்தம், விருட்சப் பொருத்தம்.
ஜோதிட சாஸ்திரத்தில் நட்சத்திரங்களை மூன்று கணங்களாக பிரிக்கிறார்கள். அவை முறையயே தேவ கணம், மானுஷ கணம், மற்றும் ராக்ஷஸ கணம் ஆகும். வாழ்வில் மங்களம் பெருக இந்த கணப் பொருத்தம் மிகவும் அவசியம்.
தேவ கணம் நட்சத்திரங்கள்:
அசுவினி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகிய 9 நட்சத்திரங்கள் தேவ கண நட்சத்திரங்கள்.
Gana Porutham
மனுஷ கணம் நட்சத்திரங்கள்:
பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய 9 நட்சத்திரங்கள் மானுஷ கண நட்சத்திரங்கள்
ராக்ஷஸ கணம் நட்சத்திரங்கள்:
கிருத்திகை , ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் ஆகிய 9 நட்சத்திரங்கள் ராக்ஷஸ கண நட்சத்திரங்கள்
ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரே கணம் (ராட்சச கணம் தவிர)சேர்ந்தவர்களானால், இருவருக்கும் மணம் செய்யலாம்.
Gana Porutham
பெண் தேவ கணம் பையன் மனுஷ கணம் இருந்தால் மத்திமம், அது பரவாயில்லை.
பெண் தேவ கணம் பையன் ராக்ஷஸ கணமாக இருந்தால் பொருந்தாது
பெண் மானுஷ கணம் பிள்ளை ராக்ஷஸ கணமாக இருந்தால் பொருந்தாது.
ஆண் ராக்ஷஸ கணமும் ஸ்திரீ மனுஷ கணமும் ஆனால் மற்ற பொருத்தங்களைக் கொண்டு ஒப்புக் கொள்ளலாம். இது மத்திம பலனைத் தான் கொடுக்கும்.
Gana Porutham
ஆண் பெண் இருவரும் ராட்சச கனமாக இருக்கக் கூடாது
பெண் ராட்சஸ கனமாக இருந்தால் வேறு எதனுடனும் பொருந்தாது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu