இந்தியாவை வளமாக மாற்றும் இந்து மதத்தின் பண்டிகைகள்
அந்நியர் வருகைக்கு முன் இத்தேசம் பெரும் பணக்கார தேசமாய் எங்கும் பொன்னும் மணியும் மின்னும் சொர்க்கமாய் இருந்தது என்றால் இப்படித்தான். இந்துமதம் என்பது வெறும் சாமியார் மடம் அல்ல. அது அற்புதமான வாழ்வியல், மிக நுணுக்கமான வலைப்பின்னலை கொண்ட சமூக அமைப்பு. அது மனிதனின் ஆன்மா, அகம், புறம் என எல்லாவற்றுக்கும் வழிகாட்டிற்று.
பண்டிகைகள் விழாக்கள் எனும் பெயரில் அது மாபெரும் பண சுழற்சியினை கொண்டிருந்தது. அங்கே வரியும் இதர பண்முறைகளும் அரசுக்கு இப்படித்தான் வந்து கொண்டிருந்தன. அது நாட்டின் மகா முக்கிய வருமானமாயிருந்தது.
இந்துமதம் மக்கள் பணத்தை பதுக்க வழியில்லாதபடி சுழற்சியில் செலுத்த, நாட்டு நலனுக்காக அப்படி சுற்றிக்கொண்டே இருக்க வழி செய்தது. அமெரிக்கா போன்ற நாடுகளில் கேளிக்கைகள் அதிகம். அது ஆடல் பாடல் அரங்கமோ, மைதானமோ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அதிகம். சீனா போன்ற நாடுகளில் சூதாட்டம் அதிகம்.
அதாவது பணம் சுற்றிக்கொண்டே இருக்க அப்படி அச்சமூக அமைப்பு வழி செய்துள்ளது. பணம் சுழலச்சுழல அரசுக்கு வருமானம் வந்துகொண்டே இருக்கும். அந்த பொருளாதார தத்துவத்தை இந்துமதம் காட்டி சொல்லி, நல்லமுறையில் சொல்லி, பசுவிடம் கன்றினை காட்டி பால் கறப்பது போல எல்லோருக்கும் நன்றாய் சொல்லி வைத்த மதம் இந்துமதம்.
ஆக இந்த தமிழகத்தில் ஒரே நாளில் விற்பனையான 60 ஆயிரம் கோடி ரூபாயில் அரசுக்கு வரியாக வந்திருக்கும் பணத்தை ஊகித்து கொள்ளுங்கள். இது வெளிதெரிந்த கணக்கு என்றால் தெரியாத கணக்கு இதனை விட அதிகம். கோயில் வருமானம் தனிக் கணக்கு.
தமிழகமே இப்படி என்றால் இந்தியாவின் மொத்த பணச்சுழற்சியினை யோசியுங்கள். இந்தியா எப்படியான நாடு என்பதும், இந்துமதம் எவ்வளவு அவசியம் என்பதும் தெரியும். இந்தியாவின் முதுகெலும்பல்ல உயிரே இந்து மதம் தான், அதை ஒழித்தால் இந்தியாவினை பலவீனமாக்கலாம் என பெரும் சதி நடப்பதும் இதனால் தான்.
இந்துமதம் என ஒன்று இல்லாவிட்டால் இந்த தேசம் என்றோ ஆப்கானிஸ்தான் போல் மாறியிருக்கும். இந்துமதம் எனும் தேனீதான் இந்த தேனை ஆப்கானியர், ஈரானியர், துருக்கியர், பிரிட்டிசார் என ஆளாலுக்கு அள்ளி அள்ளி சென்றபின்னும் மீண்டும் மீண்டும் தேன்கூடாக கட்டிகொண்டிருக்கின்றது. இந்த அட்சய பாத்திரத்தால் தான் இந்தியா மீண்டும் மீண்டும் தலைநிமிர்ந்து நிற்கின்றது.
ஏன் இந்துமதம் அவசியம், இந்துவாக வாழ்தல் அவசியம் என்றால் அதுதான் தேசத்துக்கும் அதன் எல்லா வகைக்கும் நல்லது. பொருளாதாரம் உள்பட. தீபாவளிக்கே இப்படி என்றால் மாதம் மாதம் , வாரம் வாரம் ஒவ்வொரு பண்டிகையிலும் வரும் பணமென்ன, இதன் மூலம் அரசுக்கு வரும் வரி என்ன? கணக்கு போடுங்கள். நமது வளமை புரியும்.
வீரசிவாஜி போன்ற அரசர்கள் தன் இந்து அரசால் மொகலாயத்துக்கும் துருக்கி சுல்தானுக்கும் சவால் விட்டார்கள் என்றால் இந்துமத பொருளாதார தத்துவமே காரணம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu