/* */

பங்குனி உத்திரமும் திருக்கல்யாணங்களும்..!

64 கலைகளும் கூடி சந்திரன் காட்சியளிக்கும் முழுநிலவு நாள் தான் பங்குனி உத்திரம்.

HIGHLIGHTS

பங்குனி உத்திரமும் திருக்கல்யாணங்களும்..!
X

பழனியில் முருகனுக்கு நடந்த திருக்கல்யாணம் (கோப்பு படம்)

மகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்த அன்னை மகாலட்சுமிக்கு, தன்னுடைய மார்பில் வீற்றிருக்கும் வரத்தை கடவுள் விஷ்ணு அளித்த நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள்.

பங்குனி மாதம் பிறந்தாலே, கல்யாணம் களைகட்டிவிடும். இது தெய்வங்களுக்கு திருமணம் செய்து பார்க்கும் மாதம் என்பதால், பக்தர்களுக்குக் கொண்டாட்டம் தான். வழக்கமாக இந்து மதத்தில் முழு நிலவு நாட்கள் அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை. தமிழ் மாதங்கள் பன்னிரண்டிலும் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி வருவது குறிப்பிட்ட நட்சத்திரத்தை ஒட்டியே அமையும் என்பதைப்போல, தமிழ் ஆண்டின் கடைசி மாதமான பங்குனியில் வரும் பௌர்ணமி உத்திர நட்சத்திரத்தில் வருவதால் பங்குனி உத்திரம் என்று பெயர் பெற்றுள்ளது.

மகாலட்சுமி பிறந்தது பங்குனி உத்திர நாளில்தான் என்று சொல்வார்கள். காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்த அன்னை மகாலட்சுமிக்கு, தன்னுடைய மார்பில் வீற்றிருக்கும் வரத்தை கடவுள் விஷ்ணு அளித்ததும் பங்குனி உத்திரத் திருநாளில் தான் என விஷ்ணு புராணம் கூறுகிறது.

பொதுவாக, பங்குனி உத்திர நாளன்று, சூரியனது வெப்பம் அதிமாகவும் சந்திரனின் குளிர்ச்சியும் அதிகமாகவும் இருக்கும். சந்திரன் தன் 64 கலைகளும் கூடி காட்சியளிக்கும் நாள் பங்குனி உத்திரம் என்பதால் சிறப்பு பெறுகிறது. இந்த நாளில் சூரியனும், சந்திரனும் சம பலத்துடன் அமைவதால், மனிதர்களின் உடலும் மனதும் வலிமையாக இருக்கும் என்று சொல்வார்கள்.

பங்குனி உத்திர நாளன்று, கோவில்களில் திருக்கல்யாணங்கள் நடக்கும். சிவன் கோவில்களில், சிவன் பார்வதி திருமணத்தை விட, முருகன் தெய்வயானை திருமணம் விஷேசமாக நடைபெறும். அதேபோல, வைணவர்களின் மரபுப்படி, பெருமாள் கோவில்களில் ஆண்டாள் கல்யாணம், ரங்கநாதர் திருமணம் என பக்தர்கள் திருமணங்களில் கலந்துக் கொண்டு மகிழ்வார்கள்.

பங்குனி உத்திரத்தன்று முருகனுக்கு காவடி எடுப்பது விசேஷமானது. சிவன் பார்வதி, முருகன் - வள்ளி - தெய்வானை படத்தை வைத்து வழிபடுவது சைவர்களின் வழிபாட்டு முறையாக இருக்கிறது. பங்குனி உத்திர நாளன்று விரதம் இருப்பது சிறப்பு. அதிகாலை எழுந்து இஷ்ட தெய்வத்தை வணங்கி நீராடி அந்தந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை அல்லது துதியை அல்லது தெய்வத்தின் திருநாமத்தை மனதார உச்சரிக்க வேண்டும்.

பங்குனி உத்திர நாளன்று தானங்கள் செய்வது சிறப்பு. பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து, கோவில்களில் நடைபெறும் தெய்வத் திருவிழாவை தரிசித்து மனதார வேண்டினால் மனம் போல் மாங்கல்யம் அமையும் என்றும், வாழ்நாள் முழுவதும் தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ தெய்வங்கள் அருள் புரியும் என்பது நம்பிக்கை. அதனால் தான் இந்த நாளன்று இருக்கும் விரதத்திற்கு திருமண விரதம் என்றும் பெயர் உண்டு.

பங்குனி உத்திரம் விரதமிருந்துதான், மகாலட்சுமி மகாவிஷ்ணுவை மணந்ததாக ஐதீகம். அதேபோல், பங்குனி உத்திர நாளன்று விரதம் இருந்ததால் தான், பிரம்மன் சரஸ்வதியை நாவிலேயே குடி வைத்தார் என்று நம்பப்படுகிறது.

Updated On: 27 March 2024 12:39 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...