/* */

கனவில் பூக்களை காண்பது நல்லதா..? தெரிஞ்சுக்கங்க..!

May All Dreams Come True Meaning in Tamil-கனவு என்பது மனித நினைவுகளின் எச்சம் என்று கூறலாம். அதாவது உறக்கத்தில் மனித எண்ணங்களின் காட்சிகளாக விரிவதே கனவு.

HIGHLIGHTS

கனவில் பூக்களை காண்பது நல்லதா..? தெரிஞ்சுக்கங்க..!
X

பூக்களை கனவில் கண்டால் பலன் என்ன? (கோப்பு படம்)

May All Dreams Come True Meaning in Tamil

கனவுகள் என்பது மனிதன் தூங்கும்போது அவனுக்குள் எழும் மன ஓட்டங்களின் காட்சி வடிவம். மகிழ்ச்சியாக இருந்தால் கனவுகள் மகிழ்ச்சியானதாக உருப்பெறும். கவலைகள் என்றால் மோசமான விளைவுகளைக்காட்டும் காட்சிகளாக விரியும்.

அந்த வகையில் கனவில் என்ன வருகிறதோ, அந்த பொருட்களின் அடிப்படையில் கனவுகளை விவரிக்கலாம். அந்த வகையில் கனவில் பூக்கள் வந்தால் அதன் பொருள் என்ன என்பதை காண்போம் வாங்க.

கனவில் பூக்களைக் கண்டால் அதன் பலன் என்ன?

பூக்கள் மென்மையானவை. காதலின் வடிவம். இறைவனுக்கு மாலையாக அணிவிக்கும் ஒரு தாவர விளைபொருள். இயற்கையின் கொடை. பூக்களை ராசிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. சிறு குளந்தைகள் கூட பூக்களின் வண்ணங்களைக் கண்டு அதை தொடுவதற்கு முயற்சிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அவ்வாறான பூக்களை கனவில் கண்டால்..

மல்லிகை

மல்லிகைப் பூவைக் கனவில் காண்பது மிகவும் சிறப்பானது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கப் போவதின் சிக்னல்.

வெள்ளை தாமரை

வெள்ளைத் தாமரையை கனவில் கண்டால் சரஸ்வதி தேவியின் பரிபூரண அருள் கிடைக்கும். கல்வியில் சிறப்பான தேர்ச்சி பெற்று உயர்வான நிலையை அடையப்போவதின் அடையாளம்.

ரோஜாப்பூ

ரோஜாப் பூவைக் கனவில் கண்டால் செய்த செயலுக்கு பாராட்டுகள் குவியும். மேலும் அனைத்து விதத்திலும் நன்மை உண்டாகி ஒரு உயர்வான இடத்தை அடைவதன் சைகை.

முல்லை

முல்லைப் பூவை கனவில் கண்டால் அம்மா வழியில் இருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். அதாவது அம்மா வழி தாத்தா, பட்டி அல்லது தாய்மாமனிடம் இருந்து உதவிகளாக பொன்னோ பொருளோ கிடைக்கலாம்.

பன்னீர் பூ

பன்னீர் பூவைக் கனவில் கண்டால் வெளியூர் அல்லது வெளி நாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். அது வேலை வாய்ப்பாக இருக்கலாம்.

May All Dreams Come True Meaning in Tamil

பவள மல்லி

பவளமல்லி பூவைக் கனவில் கண்டால் தந்தை வழி உறவுகளால் நன்மை ஏற்படும் என்று அர்த்தம். தந்தையின் பெற்றோரான தாத்தா பாட்டி அல்லது சித்தப்பா, அத்தை போன்றவர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கலாம்.

சாமந்தி

சாமந்தி பூவைக் கனவில் கண்டால் குடும்பத்தில் சுப நிகழ்சிகள் நடக்க போகிறது என்று அர்த்தம்.

வாடாமல்லி

வாடாமல்லி பூவைக் கனவில் கண்டால் உறவினர்களால் ஏதாவது நன்மைகளோ அல்லது உதவிகளோ கிடைக்கும் என்று பொருள்.

அல்லிப்பூ

அல்லிப் பூவை கனவில் கண்டால் மனைவி வழி உறவினர்களால் நன்மை ஏற்படும் என்பாது பொருள்.

பூ பறிப்பது போல

செடியில் இருந்து பூக்களை பறிப்பது போல கனவு கண்டால், நல்ல பலன்கள் கிடைக்கும். நிலம் வீடு, நகை வாங்கும் யோகம் ஏற்படலாம்.

மஞ்சள் நிறப்பூ

பூவை கனவில் காண்பது பொதுவாகவே நன்மை உண்டாகும் என்று அர்த்தம். மஞ்சள் நிற பூக்களை கனவில் கண்டால் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும்.

பெரும்புகழ்

தாமரை, வெள்ளை நிற பூக்கள், பூமாலை, போன்றவைகளைப் மற்றவர்களிடம் இருந்து பெறுவது போல கனவு கண்டால் பெரும் புகழ் வந்து சேரும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 March 2024 7:22 AM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...