அயோத்தி ராமர் கோவில் எப்படி இருக்கும் என தெரியுமா? இதோ பாருங்கள்
அயோத்தி ராமர் கோவிலின் உட்புற பகுதியின் எழில் மிகு தோற்றம்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது பாரதிய ஜனதா கட்சியின் நீண்ட கால கொள்கை. இந்த கொள்கையை தற்போது அது நிறைவேற்றியுள்ளது. ராமர் கோவில் வருகிற ஜனவரி மாதம் 22ஆம் தேதி திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி மற்றும் பாபர் மசூதி பிரச்சனை இந்தியாவின் நீண்ட கால தலைவலியாக இருந்து வந்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் அந்த இடத்தில் ராமர் பிறந்த இடமான இங்கு ராமர் கோவில் கட்டியே தீருவோம் என பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் உறுதி பூண்டன. இதனால் பெரும் கலவரங்கள் உண்டானது. இது தரப்பினரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத் மாவட்ட கோர்ட்டில் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை சென்றார்கள். இறுதியாக உச்சநீதிமன்றம் இரு தரப்பினரும் சமாதானம் அடையும் வகையில் ஒரு தீர்ப்பை வழங்கியது. ராமர் கோவில் கட்டுவதற்கும் அனுமதி வழங்கியது.
அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கியது. பிரதமர் மோடி இதற்கு அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். தற்போது கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்படும் பிரதமர் மோடி இதில் கலந்து கொள்வார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ராமர் கோவிலை கட்டி வரும் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையினர் கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து நேரில் அழைப்பிதழ் கொடுத்தனர்.
அழைப்பிதழை பெற்றுக் கொண்ட மோடி நான் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவன் என் வாழ்நாளில் மிகப்பெரிய அதிர்ஷ்டமாக இதனை கருதுகிறேன் என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம், தேசிய குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதிகள் பாரதிய ஜனதாவின் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டன. இதில் ராமர் கோவில் தற்போது கட்டி முடிக்கப்பட்டதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி ஒரு வாக்குறுதியை நிறைவேற்றி விட்டது.
2024 மே அல்லது ஏப்ரல் மாதம் தேர்தல் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கு முன்னதாகவே பாரதிய ஜனதாவின் வாக்குறுதி நிறைவேற்றப்படுவதாக கருதப்படுகிறது.
அயோத்தி ராமர் கோவில் ஆனது சுமார்2.7 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது கோவில் கட்டிடங்கள் மட்டும் 57,400 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது .இங்கு ராமர் சிலை திறப்பு விழா அன்று நிர்மாணிக்கப்பட உள்ளது. ராமர் கோவில் வளாகத்தில் சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, விஷ்ணு ,பிரம்மா ஆகிய கடவுள்களுக்கும் தனித்தனியாக சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 1800 கோடி ரூபாய் செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்தியா முழுவதும் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து இந்துமத தலைவர்கள் மற்றும் ஆன்மீக துறவிகள், மடாதிபதிகள் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு எல்லோரும் சென்று பங்கேற்க முடியுமா என்பது பற்றி நமக்கு தெரியாது. ஆனால் ராமர் கோவில் எப்படி இருக்கும் என்பதை வெளிக்காட்ட சமூக வலைத்தளங்களில் படங்கள் ஏராளமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் சில படங்கள் இங்கு பதிவிடப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu