Christmas Wishes in Tamil-கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வோமா?

Christmas Wishes in Tamil-கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வோமா?
X

christmas wishes in tamil-கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (கோப்பு படம்)

உலகின் பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்துமஸ் பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

Christmas Wishes in Tamil

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டு மகிழ்வார்கள். அவர்களுக்கான சிறந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கவிதைகளை இந்த பதிவின் மூலம் காணலாம் வாங்க

இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை தான் உலகம் முழுவதும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா அல்லது கிறிஸ்துமஸ் என்று அழைக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் நாளன்று அனைத்து வழிப்பாட்டு தளங்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

Christmas Wishes in Tamil

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிதல், நிகழ்ச்சிகளை நடத்துதல், பரிசுப்பொருட்களை வழங்குதல், கிருஸ்து பாடல்களை பாடுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் அந்நாளில் நடைபெறும். மேலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் சிறப்புடன் கொண்டாடப்படும். இதோ கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் :-

நம் பாவங்களை போக்க பரமபிதா

பூமியில் மனிதனாக அவதரித்த

தினம் தான் கிறிஸ்துமஸ்.

இனிய கிறிஸ்து பிறப்பு வாழ்த்துகள்

இயேசு பிறந்தார்

எங்கள் இயேசு பிறந்தார்.

விண்ணின் தேவன்

மண்ணில் பிறந்தார்.

அகம் மகிழ்ந்து ஆற்பரித்து

நாம் கொண்டாடுவோம்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

Christmas Wishes in Tamil

அன்பை மட்டுமே விதைத்து சென்ற

இயேசுபிரான் பிறந்த தினம் இன்று.

நாமும் அன்பை விதைப்போம்

அன்பால் உலகை ஆள்வோம்.

அன்புடன்

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

மாசு மருவற்ற மகிமையின் தேவன்

நம் மகிமைக்கு மரியின் மகனாக

மனித உருவில்

மண்ணில் உதித்தார் இன்று.

கிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துகள்.

இதயம் தொட்ட உறவுகளுக்கும்,

இதயமான நண்பர்களுக்கும்,

இதயம் கனிந்த

கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள்

Christmas Wishes in Tamil

மண்ணில் பிறந்த விண்ணின் மகன்,

மண்ணின் மகனாகிய

உங்கள் வெற்றிக்கு

உறுதுணையாக இருப்பார்

கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள்

உங்கள் முயற்சிக்கு தக்க பலனை

இயேசு கிறிஸ்து அருள்வார்.

நம்பிக்கையுடன் முயற்சி தொடரட்டும்

வெற்றி நிச்சயம்.

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

விண்ணின் வெளிச்சம்

மண்ணின் விருட்சம்

மனிதம் மலர

மானிடர் போற்ற

வாழ்ந்த இறைமகன் இயேசு பிரான்

பிறந்த இந்த தினத்தில்

உங்களுக்கு வாழ்த்துகள்

சொல்வதில் மகிழ்கிறேன்

இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள்

Christmas Wishes in Tamil

கடவுளால் இயலாதது எதுவுமில்லை.

- Luke 1:37.

இந்த கிறிஸ்து பிறப்பு நாளில்

அவரை ஆராதித்து

அருட்கொடைகளை பெற்றுக் கொள்வோம்

இனிய கிறிஸ்து பிறப்பு வாழ்த்துகள்

அன்பு மனிதனுக்கு அழகு

மன்னிப்பு மனிதனுக்கு மாண்பு

பின் செல்வோம்,

தேவமைந்தன் முன் செல்ல,

அவர் வழி பின்பற்றி

பின் செல்வோம்

இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள்

பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பாடுவோம்

இறைத்தூதர் இயேசுவை கொண்டாடி மகிழ்வோம்

மன்றாடி வரங்கள் வாங்கி வாழுவோம்

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துகள்.

Christmas Wishes in Tamil

ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்மஸ்

மற்றும் ஒரு மறக்கமுடியாத

ஆண்டைக் கொண்டாடுங்கள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

கடவுள் உங்களை

எல்லா பிரச்சனைகளிலிருந்தும்

விடுவித்து, வாழ்க்கையில்

பெரிய விஷயங்களை அடைய

உங்களுக்கு உதவ

நான் பிரார்த்திக்கிறேன்.

என் இதயத்தில் வசிக்கும்

அனைத்து அற்புதமான

மனிதர்களுக்கும்,

இந்த கிறிஸ்துமஸ் தரும்

எல்லையற்ற மகிழ்ச்சி

மற்றும் அளவிட முடியாத

மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றையும்

நான் விரும்புகிறேன்,

அது உங்களுக்கான வாழ்த்து.

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

Christmas Wishes in Tamil

நான் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன்,

உன்னை விட என்னை மகிழ்ச்சியடையச் செய்ய

இந்த உலகில் யாரும் இல்லை

என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!

இந்த பண்டிகைக் காலத்தில்

உங்களுக்கு அன்பான வாழ்த்துகள்

வரவிருக்கும் புத்தாண்டில்

எல்லா வளமும்

இறைவனின் ஆசியும்

கிடைக்கட்டும்

வாழ்க்கையில் நான் பெற்ற சிறந்த பரிசு நீங்கள்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!