கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.. பிரார்த்தனை செய்யுங்கள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..!

Christmas Wishes in Tamil
X

Christmas Wishes in Tamil

Christmas Wishes in Tamil -கிறிஸ்தவ கருத்துக்களின்படி இயேசு கிறிஸ்து அவரது இறப்பிற்குப் பின் மீண்டும் உயிர்பெற்றெழுந்த நாளாகிய உயிர்த்த ஞாயிறு மிக முக்கியமான விழாவாக கருதப்படுகிறது.

Christmas Wishes in Tamil

கிறிஸ்து பிறந்த அன்றைய தினமே கிறிஸ்துமஸ் பெருவிழா அல்லது கிறிஸ்துமஸ் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் நாளாகும். இவ்விழா கிறிஸ்தவ வழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்தவத்தின் பரவல் காரணமாகவும் அக்கொண்டாட்டங்களில் காணப்படும் மேற்குலக நாகரிகங்களின் கவர்ச்சி காரணமாகவும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க, பிரித்தானிய வழமைகளுக்கு மேலதிகமாக அவ்வப்பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வேறுபடுகின்றன.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறி இனிப்புகள் வழங்கி மகிழ்வார்கள்.

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்விப்பது, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது, பரிசுப்பொருட்களை வழங்குவது,கிருஸ்து பாடல்களை பாடுதல் போன்ற பல்வேறு நிகழ்சச்சிகள் கிறிஸ்துமஸ் அன்று நடைபெறும். மேலும் வண்ண விளக்குகளால் சர்ச்கள் அலங்கரிக்கப்பட்டு முதல் நாள் நள்ளிரவு முதல் பிரார்த்தனை நடக்கும்.

  • கருணையும் அருளும் நிறைந்தவர் இயேசு.. துன்பங்களை போக்குபவர்..அவரை பிரார்த்தனை செய்யுங்கள்..அவர் உங்கள் வாழ்க்கையை ஆசீர்வாதங்கள் நிறைந்ததாக மாற்றுவார். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..!
  • இந்த கிறிஸ்துமஸ் நாள் அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஆசீர்வாதங்களுடன் தொடங்கட்டும்..உங்கள் வாழ்க்கை துன்பங்கள் இல்லாத வாழ்க்கையாக அமைய ஆண்டவர் அருள்வாராக.. உங்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..!
  • நீங்கள் இறைவனிடம் இறைஞ்சிக்கேட்ட நீங்கள் விரும்பிய அனைத்தையும் கனவு காணுங்கள்..! இறைவன் அதை நிறைவேற்றித்தருவார்..! இந்த கிறிஸ்துமஸ் உங்களுக்கு வாழ்க்கையில் தேவையான அனைத்தையும் கொண்டு வரும் நாளாக அமையட்டும்..இனிய . கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..!


  • ஆரோக்கியம் தேடி எங்கும் அலையவேண்டாம்..ஆண்டவர் திருவடி பணியுங்கள்..இயேசு அருள்வார்..எல்லாமே..மகிழ்ச்சியும், அமைதியும் அருள்வாராக..இனிய புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..!
  • இந்த மகிழ்ச்சியான நாள் உங்களைச் சுற்றி இருக்கும் தீமைகளை விலகிப்போகச் செய்யட்டும்..! நன்மைகள் உங்களை வந்து சேரட்டும்..ஆண்டவர் இயேசு உங்களின் குழப்பங்களை தீர்த்து வைப்பார்..! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..!
  • துன்பங்களையும், துயரங்களையும் விரட்டவே கிறிஸ்து அவதரித்தார். விடிவெள்ளியாக வந்தார்..தேவன் இயேசு கிறிஸ்து இல்லங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவார்..துன்பங்களை போக்குவார்..! இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்..!
  • எளிமையாக பிறந்தவர்.. எளிமையாக வாழ்ந்தவர்.. உலகத்துக்கே வழி காட்டியவர்..அன்பின் வடிவமானவர்..துன்பங்களை தூசுபோல தாங்கியவர்..கர்த்தரை பிரார்த்தனை செய்யுங்கள்..வேண்டியதை மனதில் இருத்தி ஜெபம் செய்யுங்கள்..அவர் அருளால் எல்லாமே கைகூடும்..! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..!
  • மண்ணில் வந்துதித்த விண்ணகத்து தேவனை, கனிவுடன் உள்ளம் இரங்கி பிரார்த்தனை செய்வோம்..வாராத இன்பங்கள் எல்லாமே வந்து சேரும்..! கிறித்து அவதரித்த இந்த நன்னாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வோம்..! இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் ..!
  • இறைவனின் கிருபை நலங்களைக் கொண்டுவரும்..! ஆண்டவன் அருளது ஆரோக்யம் தந்துவிடும்..! அன்பும்,கருணையும் நிறைந்திட்ட தேவனே..நிம்மதி அருளும் எங்கள் வீடுகளில் மகிழ்ச்சி பொங்கவே..! அனைவரும் நலம் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்..!

  • தூயவர் எங்கள் ஆண்டவர்..துன்பங்கள் போக்குவார்..! ஏழைகள் உள்ளங்களில் இறைவனாக வாழும் எளியவர்..அவரே எங்களின் தேவன் இயேசு பிரபு..! இல்லாதோருக்கு அள்ளித்தரும் கருணை உள்ளம் கொண்டவர்..! தேவனே எங்களை இன்று ஆசீர்வதிப்பாயாக..! அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!