சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய விழா

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய விழா
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது இதனைத் தொடர்ந்து பூ மேட்டு தெரு கிராமத்து சார்பாக நடைபெற்ற மண்டகப் பணியில் ஜெனகை மாரியம்மன் உச்சிமாகாளி அம்மன் கோவிலில் இருந்து அலங்காரத்துடன் அம்மன் ஊர்வலமாக வந்தார்.

இதில் பாஜக மாநில விவசாய விவசாய பிரிவு தலைவர் மணி முத்தையா கலைவாணி, பள்ளி தாளாளர், சோழவந்தான் அரிமா சங்க தலைவர் பேரூராட்சி திமுக கவுன்சிலர் மருது பாண்டியன் மற்றும் பள்ளி நிர்வாகி வள்ளி மயில் மற்றும் பூ மேட்டு தெரு கிராமத்தார் ஊர்வலத்தில் பெண்கள் முளைப்பாரியுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் ஒயிலாட்டக் கலைஞர்கள் ஒயிலாட்டம் ஆடி வந்தனர் சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலம் வந்து இரவு கோவில் முன்பு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது கோவில் செயல் அலுவலர் இளமதி பணியாளர்கள் பூபதி வசந்த் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story