நீங்கள் தனுசு லக்கினக்காரரா..? அப்ப உங்க குணம் இதுதான்..!

நீங்கள் தனுசு லக்கினக்காரரா..? அப்ப உங்க குணம் இதுதான்..!
X

-தனுசு லக்கினக்காரர்களின் குணாதிசயங்கள்.(கோப்பு படம்)

Sagittarius in Tamil -ஜாதக அடிப்படையில் ஒவ்வொரு லக்கினக்காரருக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் இருக்கும்.

Sagittarius in Tamil -சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களின் அடிப்படையில் ஒவ்வொருவரின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. பிறந்த நேரத்தை கணக்கிட்டு அவர்களுக்கான லக்கினம்,நட்சத்திரம் மற்றும் ராசி ஆகியன சாஸ்திர நூல்களில் இருந்து கணிக்கப்படுகிறது.

ஒவ்வொரு லக்கினக்காரர்களும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த வரிசையில் இன்று தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம் வாங்க.


அறிவாளிகள்

தனுசு லக்னத்தின் அதிபதி குரு பகவான். தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். விவேகம் மிக்கவர்கள். இவர்கள் வெளிநாடுகளுக்குச் பொருள் ஈட்டுவார்கள். இவர்கள் எல்லா தரப்பினரையும் வயதில் மூத்தவர்களையும், படித்தவர்களையும் மதித்து மரியாதை செய்யும் குணமுடையவர்கள். சுறுசுறுப்பான மனிதராக இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்க்கையின் முற்பகுதியைக்காட்டிலும் அவரக்ளது வாழ்க்கையின் பிற்பகுதியில் செல்வச் செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

அழகும் மிடுக்கும்

தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் மிடுக்கும் அழகும் கொண்ட தோற்றம் உடையவர்களாக இருப்பார்கள். அதேபோல எதையும் செய்வதிலும் இவர்கள் தாராள மனது கொண்டவர்களாக இருப்பர்கள். சேறுசெருப்புடன் துணிச்சல்மிக்கவராகவும் இருப்பார்கள். விளையாட்டில் அதிக ஈடுபாடு உடையவர்கள். அவர்களை யாரும் புகழ்ந்தால் அந்த புகழ்ச்சியில் மகிழ்ச்சியடைவார்கள். புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள். இவர்களிடம் சுயநலம் அதிகமாக இருக்கும். ஆன்மிக செயல்பாடுகள் மற்றும் பிற பொது உதவிகள் என்றால் தாராள உதவியை செய்வார்கள்.

ஆன்மிக நாட்டம்

பழைமையான விஷயங்களை பின்பற்றுவதிலும், வேதம் மற்றும் மதம் சார்ந்த விஷயங்களிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வீண் பகட்டு இவர்களிடம் இருக்காது. பிறரிடம் உண்மையாக இருக்கவே விரும்புவார்கள். மற்றவர்களும் அதே போல இருக்க வேண்டும் என நினைப்பார்கள். மிகவும் இளகிய மனம் கொண்டவர்கள். இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தயாள மற்றும் ஈகை உள்ளம் கொண்டவர்கள்.

சகோதர சகோதரிகளுக்கு நன்மை

நல்ல ஒழுக்கம் உடையவர்களாக இருக்கவே விரும்புவார்கள். மனிதாபிமானத்துக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். மிகவும் இளகிய மனம் கொண்டவர்கள். தனுசு லக்கினத்தில் பிறந்த இவர்களால் இவரின் சகோதர, சகோதரிகள் உதவி பெறுவார்கள். ஆனால் அவர்களிடம் இருந்து இவர்களுக்கு எந்த பயனும் கிடைக்காது. உறவினர்கள் இவர்களுக்கு மோசம் செய்தால் அவர்களின் உறவை துண்டித்துக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள். இவர்களிடம் நல்ல இனிமையான குரல் வளமும் இருக்கும்.

சமாளிக்கும் திறன்

இவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். அதனால் பிறருக்கு துரோகம் செய்ய அஞ்சுவார்கள். எப்பேற்பட்ட கஷ்டங்கள், எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் இவர்களின் வாழ்க்கையில் குறுக்கிட்டடாலும் அவைகளை சமாளித்து முன்னேற்றப் பாதையை நோக்கி வளர்வார்கள். தர்ம சிந்தனை அதிகம் கொண்டவர்கள்.


திருமணம் தாமதமாகும்

பொதுவாகவே, தனுசு லக்கினக்காரர்கள் எல்லோருக்கும் ஆலோசனை சொல்லும் இடத்தில் இருப்பார்கள். இவர்களுக்கு திருமணம் தள்ளிப்போகலாம். தாமதமாக திருமணம் நடக்கும். எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக பேசுபவர்களாக இருப்பார்கள். ரகசியம் காக்கத் தெரியாதவர்கள். அதனால் இவர்களிடம் ரகசியங்களை சொல்லக்கூடாது.

சீர்தூக்கும் சிறந்த முடிவு

தன்னுடைய சொந்த கருத்துகளுக்கே முக்கியத்துவம் தரும் இவர்கள், யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக எதையும் முடிவு செய்வார்கள். ஆனால் எந்த விஷயமானாலும் சரி அதை அலசி ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுப்பதில் இவர்களை மிஞ்சிவிட முடியாது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்