பைபிள் கூறுவதாவது...இறைவன் உங்களோடு இருக்கிறார்..! பைபிள் வசனங்கள்..!

பைபிள் கூறுவதாவது...இறைவன் உங்களோடு இருக்கிறார்..! பைபிள் வசனங்கள்..!
X
Bible Quotes in Tamil-பைபிள் கிறிஸ்தவர்களின் புனித நூல். விவிலியம் என்பது தமிழில் கூறப்படுவதாகும். இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்க பைபிள் வசனங்கள் உதவும்.

Bible Quotes in Tamil-பைபிள் (Bible) என்பது கிறித்துவர்களின் புனித நூல். பைபிள் (Bible) பல நூல்களின் கோர்வையாகும். இது இரண்டு பாகங்களாக இருக்கிறது. இது பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகும். இந்த நூல் அரபிக் மற்றும் கிரீக் மொழிகளில் எழுதப் பட்டிருக்கும். பைபிள் அனைத்து மொழிகளிலும் மொழி ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகில் அதிகமான மொழி பெயர்க்கப்பட்ட நூல் பைபிள் ஆகும்.

நமது வாசகர்களுக்காக பைபிள் வசனங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

சிறுமை பட்டவனுக்கு

கர்த்தர் அடைக்கலமானவர்

கஷ்டப்படுகின்ற காலங்களில்

அவரே தஞ்சமானவர். -சங்கீதம் 9:9

உன் பிள்ளைகள் எல்லோரும்

கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்

உனது பிள்ளைகளின் சமாதானம்

பெரிதாக இருக்கும். -ஏசாயா 54:13

நீ தீமையினால் வெல்லப்படாமல்

தீமையை நன்மையால் வெல்லு. -ரோமர் 12:21

நீ உயிரோடிருக்கும் நாள் எல்லாம்

ஒருவனும் உன் முன்பு

எதிர்த்து நிற்பதில்லைனு. -யேசு யோசு 1:5

நான் உன் கூடவே இருக்கிறேன்

உனக்கு தீங்கு செய்யும் படி

யாரும் கை போடுவதில்லை -அப்போ 18:10



நான் மோசேயோடு இருந்தது போல்

உன்னோடும் நான் இருப்பேன்

உன்னைவிட்டு நான் விலகுவதும் இல்லை

கைவிடுவதும் இல்லை. -யோசுவோ 1:3

ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்;

அவர் என் கால்களை

மான் கால்களை போல் ஆக்கி

உயரமான இடங்களில் நடக்க வைப்பார். -ஆபகூக் 3:19

நல்ல மனிதரின் நடைகள்

கர்த்தரால் உறுதிப்படும்

அவனுடைய வலியின் மேல்

அவர் பிரியமாயிருக்கிறார். -சங்கீதம் 37:23

கஷ்டத்திலே நீ கூப்பிட்டாய்

நான் உன்னை தப்புவித்தேன். -சங்கீதம் 81:7


சோதனைகளை சகித்து கொள்ளும்

மனிதன் பாக்கியவான். -யாக்கோபு 1:12

தேவன் உங்களை விசாரிக்கிறவர்

அதனால் உங்கள் கவலைகளை

எல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். -பேதரு 5:7

bible quotes in tamil

கர்த்தரின் கண்கள்

நீதிமான்கள் மேல் நோக்கி இருக்கிறது

அவருடைய செவிகள்

அவர்கள் கூப்பிடுதலுக்கு திறந்திருக்கிறது.

இதயத்தில் சுத்தமுள்ளவர்கள்

பாக்கியவான்கள்;

அவர்கள் தேவனை தரிசிப்பார்கள். -மத்தேயு 5:௮


பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா

பூரண சர்குணராயிருக்கிறது போல

நீங்களும் சர்குணராயிருக்கடவீர்கள். -மத்தேயு 5:48

சர்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும்

சத்திருவினுடைய சகல வல்லமையையும்

மேற்கொள்ள உங்களுக்கு அதிகாரம்

கொடுக்கிறேன் உங்களை ஒன்றும்

சேதப்படுத்தமாட்டாது. -லூக்கா 10:19

நீங்கள் திடமானதாயிருந்து

காரியங்களை நடத்துங்கள்

உத்தமனுக்கு கர்த்தர்

துணை என்றான். -2 நாளாகமம் 19:11

நெடுங்காலம் காத்திருப்பது

இதயத்தை மிருதுவாக்கும்

ஆனால் விரும்பியது வரும் போது

ஜீவ விருட்சம் போல் இருக்கும். -நீதி 13:12

bible quotes in tamil

அவர் ஒளியில் இருப்பது போல

நாமும் ஒளியிலே இருந்தால்

ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டிருப்போம்.

அவரின் மகன் இயேசுவின் ரத்தம்

சகல பாவங்களையும் நீக்கி

நம்மை காக்கும். -யோவான் 1:7

இப்போது பூமியை இருள் மூடியிருக்கிறது.

ஜனங்கள் இருளில் உள்ளனர்.

ஆனால் கர்த்தர் உன்மேல் ஒளிவீசுகிறார்.

அவரது மகிமை உன்மேல் தோற்றம் தரும் - ஏசாயா 60:2

கர்த்தர் உன்னை வழிநடத்துவார்.

அவர் தாமே உன்னுடன் இருக்கிறார்.

அவர் உன்னைக் கைவிடமாட்டார்.

உன்னை விட்டு விலகமாட்டார்.

கவலைப்படாதே. பயப்படாதே" என்றான். - உபாகமம் 31:8

பலமுள்ளவர்களாகவும் தைரியம்

உள்ளவர்களாகவும் இருங்கள்.

அந்த ஜனங்களுக்குப் பயப்பட வேண்டாம்.

ஏனென்றால், உன் தேவனாகிய கர்த்தர்

உன்னோடு இருக்கிறார். அவர் உன்னை விட்டு

விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்றான் - உபாகமம் 31:6

bible quotes in tamil

எல்லா மனிதர்களுக்கும் வரும்

சோதனைகளே உங்களுக்கும் வரும்.

ஆனால் நீங்கள் தேவனை நம்பமுடியும்.

நீங்கள் தாங்க இயலாத அளவு

சோதனைகளை தேவன் உங்களுக்குத் தரமாட்டார்.

உங்களுக்குச் சோதனை வரும்போது

அச்சோதனையில் இருந்து விடுபடவும்

தேவன் உங்களுக்கு வழிகாட்டுவார்.

அப்போது நீங்கள் சோதனையை

தாங்கிக்கொள்ளக்கூடும் - கொரி 10:13

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story