பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா - சிறப்பு புகைப்படங்கள்
கோவில் பூசாரி ஒருவர் அக்னி குண்டத்தில் இறங்கிய போது எடுத்த படம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த உலக பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம். இந்த ஆண்டு விழாவுக்காக கடந்த 8-ந் தேதி இரவு பூச்சாட்டப்பட்டது. அன்று முதல் பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன் சிலை சப்பரத்தில் வைக்கப்பட்டு வீதிஉலா நடந்தது. 15-ந் தேதி இரவு கம்பம் சாட்டு விழா நடந்தது. அன்று முதல் இந்த கம்பத்தை சுற்றி கடந்த 20-ந் தேதி வரை ஒவ்வொரு நாள் இரவும் மலைவாழ் மக்கள் பீனாட்சி வாத்தியத்திற்கு ஏற்ப நடனம் ஆடி மகிழ்ந்தார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. குண்டத்துக்கு பூசாரி முதலில் பூஜை செய்து தீ மிதித்தார். அதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் பண்ணாரி அம்மனுக்கு அக்னி குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். தீ மிதிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். மதியம் 2 மணி வரை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.குண்டம் திருவிழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா 2022 புகைப்படங்கள்:-
பண்ணாரி மாரியம்மன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu