அவிநாசி பெரிய கோவில் தேரோட்டம்: மூன்று நாள் நடத்த திட்டம்

அவிநாசி பெரிய கோவில் தேரோட்டம்:   மூன்று நாள் நடத்த திட்டம்
X

கோப்பு படம் 

அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டத்தை மூன்று நாட்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் புகழ்பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தேரோட் டம், சித்திரை மாதம், பூர நட்சத்திரத்தில் திருத்தே ரில் எழுந்தருளச் செய்து, மறுநாள் காலை வடம் பிடித்து, பெரிய தேர் அன் றைய தினம் மதியம் 3:00 மணியளவில், நிலை வந்து சேரும்.

மறுநாள், அம்மன் தேரோட்டம், காலையில் துவங்கி அன்றைய தினமே நிலை வந்து சேர்வதும், கடந்த தேரோட்டம் வரை நிகழ்வாக உள்ளது. தினமும் 4:00 மணிக்கு மாலை, வடம் பிடித்து நடத்தவும், சிறிய தேரினை மாலை மணிக்குத் துவங்கி நடத்த வேண்டும். என பக்தர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கடிதங்கள் வரப்பெற் றன: அவை கவனமுடன் பரிசீலிக்கப்பட்டன. பக்தர்களின் நலனை கருத் தில் கொண்டு பெரிய தேர், முதல்நாள் (மே 12ம் தேதி) காலையில் வடம் பிடித்து, குலாலர் மண்ட பத்தின் எதிர்புற சாலையின் திருப்பத்தில், வலது ஓரத்தில், பொது வாகன போக்குவரத்திற்கு இடை யூறு இல்லாமல், மதியம், 1:00 மணிக்குள் நிறுத்துவது எனவும், மறுநாள் (13ம் தேதி) வடம் பிடித்து, 4:00 வெயிலின் வெப்பம் அதிகரிக்கும் முன்பு, நிலை சேர்ப்பது, மறுநாள் (14ம் தேதி) அம்மன் தேர் மற்றும் சின்ன தேரோட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!