ஆவணி அவிட்டம்: பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி

ஆவணி அவிட்டம்: பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி
X

ஆவணி அவிட்டம் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஆவணி அவிட்டம் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிய பூணூல் அணியும் விழா!

ஆவணி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமி நாளானது ஆவணி அவிட்டம் ஆகும். அன்றைய தினம் பூணூல் அணியும் வழக்கம் உள்ளவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி புதிதாக பூணூல் அணிந்து கொள்வது வழக்கம். அதன்படி ஆவணி அவிட்டத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பூணூல் அணியும் விழா நடந்தது.

இதன் ஒரு பகுதியாக யானைமலை ஒத்தக்கடை பகுதிகளில் உள்ள அண்ணா நகர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் ஒன்பதாம் ஆண்டு பால்குடம் எடுக்கும் விழா மற்றும் 51 ம் ஆண்டை முன்னிட்டு புதிய பூணூல் அணியும் விழா நடந்தது. இதில் விஸ்வகர்மா ஐந்து நிற கொடியேற்றம் நடைபெற்றது. அதுபோல் ஆவணி அவிட்டத்தையொட்டி கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், அங்கு இருந்து ஊர்வலமாக வந்த பக்தர்கள் நரசிங்கம் பகுதியில் உள்ள மண்டபத்தில், கணபதி ஹோமம் செய்து புதிய பூணூலை அணிந்து கொண்டனர்.

இதில், விஸ்வகர்மா சங்கத்தலைவர் எஸ்.எஸ்.கே.எஸ் பாண்டித்துரை, துணைச் செயலாளர் முருகேசன், சங்க ஆலோசகர் சாந்த மூர்த்தி, சங்க அவைத் தலைவர் சன்னாசி, கிட்டிணன், துணைத் தலைவர் சிவா, சங்க பொருளாளர் கோபால கிருஷ்ணன், சங்க ஆலோசகர் இருளப்பன், பா.ஜ.க அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மதுரை கிழக்கு மாவட்டத் தலைவர் ஆதி கணேசன், யானைமலை ஒத்தக்கடை விஸ்வகுல ஐந்தொழில் கம்மாளர் கைவினைஞர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில், பக்தர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story