திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்துக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்துக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
X

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் (கோப்பு படம்)

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரம்-திருவண்ணாமலை வழித்தடத்தில் நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் உள்ள பிரசித்த பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நளை (செவ்வாய்க்கிழமை ) நடைபெற உள்ளது. இதையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்வார்கள்.

இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையிலும் நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறு நாள் (புதன்கிழமை) ஆகிய 2 தினங்களிலும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

அதன் விவரம் வருமாறு:

நாளை காலை 9.15 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்படும் முன் பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண்-06129) திருவண்ணாமலைக்கு பகல் 11 மணிக்கு சென்றடையும். அதேபோல் எதிர்வழித் தடத்தில் திருவண்ணாமலையிலிருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண்-06130) விழுப்புரத்துக்கு மதியம் 2.15 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் இந்த ரயில்கள் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வந்து, பின்னர், திருவண்ணாமலைக்கு செல்வதால் (அதாவது மயிலாடுதுறை-திருவண்ணாமலை, திருவண்ணாமலை-மயிலாடுதுறை), மயிலாடுதுறை பயணிகளும் பயன்பெறலாம்.

மேலும் விழுப்புரத்திலிருந்து நாளை இரவு 9.15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண்-06131) திருவண்ணாமலைக்கு இரவு 10.45 மணிக்கு சென்றடையும். எதிர்வழித் தடத்தில் நாளை மறுநாள்(புதன்கிழமை) அதிகாலை 3.35 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண்-06132) விழுப்புரத்துக்கு காலை 5 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் இந்த ரயில்கள் தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படுவதால் (அதாவது தாம்பரம்-திருவண்ணாமலை, திருவண்ணாமலை-தாம்பரம்), தாம்பரம் பயணிகளும் பயன்பெறலாம் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் தெரிவித்துள்ளது.

வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம்- திருவண்ணாமலை

நாளை சென்னையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரும் ரெயில் அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு வருகிறது.

பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு காலை 5.35 மணிக்கு சென்றடைகின்றது. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப் பட்டு செல்கிறது.

Tags

Next Story
மேக்-அப் போடலைன்னாலும் முகம் அழகா இருக்கணும்னு நினைக்கிறீங்களா ?.. இந்த சில விஷயங்கள மட்டும் கண்டிப்பா மறக்காம பண்ணுங்க ..!