இன்று திருமண வரம் தரும் ஆனி திருமஞ்சன நாள்: சிவாலயங்களில் பக்தர்கள் தரிசனம்

இன்று திருமண வரம் தரும் ஆனி திருமஞ்சன நாள்: சிவாலயங்களில் பக்தர்கள் தரிசனம்
X

ஆனி திருமஞ்சனத்தையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சிவகாமசுந்தரி உடனுறை நடராஜர் ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி இன்று அதிகாலை அபிஷேகம் நடத்தப்பட்டது.

Thiruvannamalai Temple Today News- ஆனி திருமஞ்சன நாளில் நடராஜரை தரிசனம் செய்தால் திருமண பாக்கியம் கிடைக்கும் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Thiruvannamalai Temple Today News- இன்று ஆனி திருமஞ்சனம் ஆகும்.ஆனி திருமஞ்சன நாளில் நடராஜரை தரிசனம் செய்தால் திருமண பாக்கியம் கிடைக்கும் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை

சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித்திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.

அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு மனம் குளிர்விக்கும் வகையில் விதம் விதமான பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள். அதை நேரில் கண்டுகளித்தால் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அபிஷேக, அலங்காரம் முடிந்த பிறகு நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஷோடச ஆராதனைக் காட்டுவார்கள்.

நடராஜரின் இடது பாகம் சக்தி தேவியின் பாகமாக கருதப்படுகிறது. எனவே நடராஜரை வழிபடும்போது அவரது இடது பக்கம் மற்றும் இடது காலையும் சேர்த்து பார்த்து வழிபடுதல் வேண்டும். அப்படி வழிபாடு செய்தால் சிவன்-சக்தி இருவரது அருளாசியை பெற முடியும்.

அதுபோல நடராஜரின் வலது பாகம் செல்வத்தை குறிக்கும். அந்த பாகத்தை பார்த்து தரிசனம் செய்தால் குடும்பத்தில் செல்வ வலம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும்.

அபிஷேகம் முடிந்த பிறகு இறைவனும், இறைவியும் ஆனந்தத் தாண்டவமாக நடனம் ஆடியபடி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். இந்த நடனத்தை காண கண்கோடி வேண்டும் என்பார்கள். இதனால்தான் இந்த நடனத்தை காண தேவர்களும், முனிவர்களும் படையெடுத்து வந்து ஆவலோடு காத்திருப்பார்கள் என்பது ஐதீகமாகும்.

ஆனி திருமஞ்சன விழாவில் பங்கேற்பவர்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும். சுமங்கலிகள் இந்த விழாவில் கலந்து கொண்டால் நீடூழி வாழ்வார்கள். கன்னிப்பெண்கள் பங்கேற்றால் விரைவில் திருமணம் கைகூடும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story