நமக்கு சமிக்கைகள் மூலம் வழிகாட்டும் பிரபஞ்சம்...!

நமக்கு சமிக்கைகள் மூலம் வழிகாட்டும் பிரபஞ்சம்...!
X

பிரபஞ்சம் தரும் இறை சக்தி ( மாதிரி படம்)

சில சமயம் நமக்கு தேவையான அறிவுரைகளை பிரபஞ்சம், இறைசக்தி சில குறியீடுகளால் சுட்டி காட்டும்.

புத்தகத்தை ஆழ்ந்து படித்து கொண்டு இருக்கிறீர்கள். அந்த புத்தகத்தில் உள்ள ஒரு வரி உங்கள் மனக்குழப்பத்திற்கு விடையாக இருக்கலாம். அந்த வரியை படிக்கும் போது மனம் அதை நம் பிரச்னையோடு சரியாக முடிச்சு போடும்.

அதே போல தெருவில் போய் கொண்டு இருக்கிறீர்கள். யாரோ யாருக்கோ எதையாவது சொல்வது உங்கள் காதில் விழும். அது நீங்கள் எடுக்க வேண்டிய முடிவிற்கு, உதவியாக கூட இருக்கலாம்.

மிகவும் குழப்பத்தில் இருக்கும் போது, சிந்தனையும் தாறுமாறாக இருக்கும். அந்த சமயத்தில் எந்த முடிவும் எடுக்காதீர்கள். சற்று ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்.மனம் அமைதியான பின், ஏதேனும் நல்ல தீர்வு சிந்தனையில் உதிக்கும்.

எல்லாமே பிரபஞ்சத்தின் ஆளுமைதான். உங்கள் முயற்சி ஆக்கபூர்வமாக இருந்தால் பிரபஞ்சமும் கைகோர்க்கும். சில சமயம், முடிவு எதிர்மறையாக இருந்தாலும், அதுவும் நன்மைக்கே என்று பின்னால் ஒரு நாளில் உணர்வோம்.

பிரபஞ்ச சக்தியாகிய இறை ஆற்றல் எங்கும் பரவி இருக்கிறது. நம்முள்ளும் ஆற்றலாய், அறிவாய் உள்ளது. நம் வினைக்கேற்ப துல்லியமாக எது நடக்க வேண்டுமோ அது சரியாக இருக்கும். நம் முயற்சி நேர்மையானதாக இருந்தால், definitely we will get Almighty support.

Next Story