sathyaraj ask huge salary for indian 2-நடிகர் சத்யராஜ் கேட்ட ஒரு நாள் சம்பளம்..அதிர்ந்த இயக்குநர் ஷங்கர்..!

sathyaraj ask huge salary for indian 2-நடிகர் சத்யராஜ் கேட்ட ஒரு நாள் சம்பளம்..அதிர்ந்த இயக்குநர் ஷங்கர்..!
X

tamil actor sathyaraj salary-நடிகர் சத்யராஜ்.

Actor Sathyaraj -இயக்குநர் ஷங்கரின் 'இந்தியன்-2' படத்தில் நடிப்பதற்காக, சத்யராஜ் கேட்ட ஒரு நாள் சம்பளம் படத்தரப்பினரை அதிரவைத்துள்ளது.

Actor Sathyaraj -தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பன் மொழிகளில் பான் இந்தியா திரைப்படம் தயாரித்து வெளியிடத் தொடங்கிய பிறகு, அந்தந்த மொழிப்படங்களில் பிரபலமான குணச்சித்திர நடிகர்கள் தங்கள் சம்பளத்தை பன்மடங்கு அதிகரித்து கேட்கத் தொடங்கியுள்ளனர் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

இதனால், படத்தின் தயாரிப்பு செலவுகள் அதிகரித்து வருகிறது என தயாரிப்பாளர்கள் தரப்பில் முணுமுணுப்பு கேட்கத் தொடங்கியுள்ளன. 'மாநாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு, படம் முழுக்க வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மூன்று முதல் எட்டு கோடி வரை எஸ்.ஜே.சூர்யா சம்பளம் கேட்டபோது, அது பெரிய விஷயமாகப் பேசப்பட்டது. ஆனால், தற்போது, ஒரு நாள் மட்டும் நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் சத்யராஜ்.

ஆம். பல்வேறு சிக்கல்களைத் தாண்டி கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் - 2' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது. அதன் படப்பிடிப்பு ஆந்திராவில், வேகமாக நடந்து வருகிறது. இந்தநிலையில், படத்தின் இயக்குநர் ஷங்கர் திரைக்கதையில் இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப, சில மாற்றங்களை செய்திருக்கிறாராம். அதன்படி ஒரு புதிய கதாபாத்திரம் படத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். அக்கதாபாத்திரத்தில், நடிகர் சத்யராஜ் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து அவரை அணுகியிருக்கிறார்கள்.

sathyaraj ask huge salary for indian 2-காரணம், இதுவரை கமல்ஹாசன் - சத்யராஜ் இணைந்து நடித்த, 'காக்கிச்சட்டை', 'விக்ரம்' உள்ளிட்ட பல படங்களில் அவர்கள் எதிரும் புதிருமாகப் பேசிக்கொண்ட வசனங்கள் கோலிவுட்டில் மிகவும் பிரபலம். குறிப்பாக, 'காக்கிச்சட்டை'யில் சத்யராஜ் பேசிய தகடு தகடு வசனம் பட்டிதொட்டி எங்கும் ரசிக்காத ரசிகர்களே இல்லை என்கிற அளவுக்கு பெரும்பான்மையினரால் ரசிக்கப்பட்டது. அதனால்தான், 'இந்தியன் - 2' திரைப்படத்திலும் அதுபோன்ற வசனங்களை சத்யராஜ் பேசினால், படத்துக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று அவரை நடிக்கக் கேட்டிருக்கிறார்கள் படத் தரப்பினர்.

படத்தின் கதையைக் கேட்டுவிட்டு, உடனே ஒப்புக்கொண்டாராம் சத்யராஜ். 'படத்தில் நடிக்க 15 நாட்கள் வரை தேவைப்படும்' என தயாரிப்புத் தரப்பில் கேட்டுக்கொண்டபோது, சத்யராஜ், ''எத்தனை நாட்கள் என்றாலும் நடித்துக் கொடுக்கின்றேன். ஆனால், தினசரி சம்பளமாக ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும்'' என்று கூறியதும் அதிர்ந்து போயுள்ளனர் இந்தியன் - 2' படத்தின் தயாரிப்புத் தரப்பினர். ஆனாலும், சத்யராஜைத் தவிர, வேறு யார் அந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அவ்வளவாக எடுபடாது என்பதால், எப்படியாவது சம்பளத்தை குறைத்து அவரை சம்மதிக்க வைக்க தயாரிப்பாளர்-இயக்குநர் தரப்பில் முயற்சிகள் நடந்து வருகின்றன.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதை கௌரமாகவும், தங்களின் அடுத்த கட்ட திரையுலக வளர்ச்சிக்கு அது பயன்படும் என்றும் ஏராளமான நடிகர்களின் எண்ணவோட்டம் உண்டு. ஆனால், சத்யராஜைப் பொறுத்தவரை அதையெல்லாம் கடந்துவிட்டவர் என்பதுதான் நிஜம். அதனால்தான், சத்யராஜ் வந்தவரை லாபம் என கருதாமல் என்னுடைய சம்பளம் இதுதான் என்று கறார் காட்டுகிறார் என்கின்றனர் அவரது நெருங்கிய வட்டத்தினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!