குறுவை பருவத்திற்கு தேவையான விதைநெல் போதிய அளவு இருப்பு உள்ளது: புதுக்கோட்டை ஆட்சியர்
புதுக்கோட்டை ஆட்சியர் உமாமகேஸ்வரி
புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை பருவத்திற்கு தேவையான நெல் விதைகள் போதிய அளவு இருப்பு உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவைப் பருவத்தில் சுமார் 4,000 எக்டேர் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இதுவரை 20.50 மெட்ரிக் டன் விதைகள் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு 2,022 எக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் 20 துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் 42 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறுவைப் பருவத்திற்கு தேவையான குறுகிய கால ரகங்களான ஏ.டீ.டி.37, ஏ.டீ.டி.45, ஏ.எஸ்.டி.16 மற்றும் கோ 51 ஆகிய நெல் விதைகளை விவசாயிகள் பெற்று பயன் அடையலாம். விதை கிராமத் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தகவலுக்கு தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டு தொலைபேசி எண் 04322 - 221666 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவலைப் பெற்று கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu