நான் உழைக்க பிறந்தவன் : பிரதமர் மோடி சொல்கிறார்..!

நான் உழைக்க பிறந்தவன் :  பிரதமர் மோடி சொல்கிறார்..!
X

பிரதமர் மோடி அதிகாரிகள் மத்தியில் பேசினார். (கோப்பு படம்)

நான் 140 கோடி மக்களுக்காக உழைக்க பிறந்தவன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று காலை பிரதமர் அலுவலகத்தில் அதிகாரிகள் மத்தியில், மோடி பேசியது:

நான் அதிகாரத்திற்காகவும், பதவிக்காகவும் பிரதமர் பொறுப்பிற்கு வரவில்லை. நாட்டின் 140 கோடி மக்களும் எனக்கு கடவுளை போன்றவர்கள். எனது உடல் மற்றும் மனம், ஆத்மா அனைத்தும் மக்களுக்கு பணியாற்றும் தன்மையுடையது. நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரதமர் அலுவலகம் பணியாற்ற வேண்டும்.

நாளை செய்வோம் என்று எதையும் தள்ளி போடாமல், இன்றே பணிகளை மேற்கொள்ள வேண்டும். 30 ஆண்டுகளாக சோர்வின்றி எப்படி பணியாற்றுகிறீர்கள் என்ற கேள்வியை மக்கள் முன் வைக்கிறார்கள். சர்வதேச அளவில் முன்னேறும் முயற்சிகளில் நாம் உடனடியாக ஈடுபட வேண்டும். எனக்குள் உள்ள கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதே என் ஆற்றலுக்கு காரணம்.

அரசாங்கம் என்பது வலிமை, அர்ப்பணிப்பு மற்றும் தீர்மானங்களின் புதிய ஆற்றலுடன் செயல்பட வேண்டும். எங்கள் குழுவை பொறுத்தவரை, நேரக்கட்டுப்பாடு, சிந்தனை வரம்புகளோ இல்லை. முயற்சிகளுக்கான நிலையான அளவுகோல் எதுவும் இல்லை. நான் பணியாற்றுவதற்காக பிறந்துள்ளேன், ஓய்வு எடுப்பதற்காக அல்ல. நான் சோம்பேறியாக எப்போதும் இருப்பதில்லை. என்னைப்போன்று பா.ஜ.க.,வினரும் உழைக்கின்றனர். அதிகாரிகளும் உழைத்தால் நமது வெற்றி எளிதில் எட்டி விடும் துாரம் தான். இவ்வாறு பேசினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்