தொண்டர்கள் யாரும் சந்திக்க வேண்டாம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வேண்டுகோள்

தொண்டர்கள் யாரும் சந்திக்க வேண்டாம் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  வேண்டுகோள்
X
நோய் தொற்று பரவும் சூழ்நிலை ஏற்படும்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக திமுக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார்

அவருடைய முதலமைச்சர் அமைச்சரவையில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மெய்யநாதன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு முதல் முதலாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்..

தற்போது தமிழக அரசு வரும் ௨௪ ம் தேதி வரை முழு ஊர் ஊரடங்கை அறிவித்திருக்கும் நிலையில் அமைச்சர் வரும் சூழ்நிலையில் தொண்டர்கள் அதிக அளவில் கூடிய அவருக்கு சால்வை மாலை அணிவித்து கூட்டம் அதிக அளவில் கூடி நோய் தொற்று பரவும் சூழ்நிலை ஏற்படும் என அச்சத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதில் கட்சி தொண்டர்கள் யாரும் தன்னை சந்தித்து சால்வை மாலை வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

வரும் 24ஆம் தேதி வரை கட்சி தொண்டர்கள் யாரும் என்னை சந்திக்க வேண்டாம் என தற்போது தொண்டர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திருச்சி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொண்டர்களுக்கு தன்னை சந்திக்க வேண்டாம் என அறிவிப்பை வெளியிட்டு விட்டு நிலையில் மற்றொரு அமைச்சரான சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொண்டர்களுக்கு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!