தமிழ்நாடு ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அமைதியாக நல்ல உடல்நலத்துடன் மகிழ்வோடு வாழ வேண்டுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
கடந்த 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி பிறந்த ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "நல்ல உடல்நலத்துடன் மகிழ்வோடு வாழ வேண்டுகிறேன்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டு இருக்கிறார். பீகாரை சேர்ந்த ஆளுநர் ரவி, காவல்துறை அதிகாரியாக பணியாற்றவர். இந்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராகவும், 2014 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிகடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார்.
2014 ஆம் ஆண்டு நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் குழுவுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தராக செயல்பட்டார் ஆர்.என்.ரவி. பின்னர் மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
நாகாலாந்து ஆளுநராக இருந்தபோது அம்மாநில மக்களுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அவருக்கு நாகா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை காரணம் காட்டி அவரை தமிழ்நாடு ஆளுநராக நியமனம் செய்யக்கூடாது என திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆளுநராக பொறுப்பேற்ற அவர், ஏழு தமிழர் விடுதலை தொடர்பாகவும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரியும் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தீர்மானங்களை கிடப்பில் போடும் ரவிநீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதால் மீண்டும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதையும் கிடப்பில் போட்டுள்ளார் ஆளுநர் ரவி.
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என, ஆளுநரின் அதிகாரத்தை திருத்தம் செய்திட வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானத்தை திமுக எம்.பி. வில்சன் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.,: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அமைதியாக நல்ல உடல்நலத்துடன் மகிழ்வோடு வாழ வேண்டுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu