டிச. 4 துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ளது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.4ம் தேதி தொடங்கி டிச.22ம் தேதி வரை நடக்கிறது.
அடுத்த வாரம் தொடங்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரிக்கு மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின் விதிகளை நீட்டிப்பதற்கான இரண்டு சட்டங்கள், குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கான மூன்று மசோதாக்கள் உட்பட 18 மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காஷ்மீரில் குடியேறியவர்கள், பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் முயற்சியின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் பலத்தை 107 லிருந்து 114 ஆக உயர்த்தும் மசோதாவை கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின் விதிகளை நீட்டிப்பதற்கான இரண்டு சட்டங்கள், குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கான மூன்று மசோதாக்கள், 2023-24ம் ஆண்டிற்கான மானியங்களுக்கான துணை கோரிக்கைகளின் முதல்பகுதி உள்பட 18 மசோதாக்கள் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu