திருநெல்வேலி வேட்பாளர் யார்? காங்கிரஸுக்கு ஸ்டாலின் கெடு

திருநெல்வேலி வேட்பாளர் யார்? காங்கிரஸுக்கு ஸ்டாலின் கெடு
X

திமுக தலைவர் ஸ்டாலின் 

திருநெல்வேலியில் இன்னும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு பிராச்சாரக் கூட்டத்தை மேற்கொள்ள உள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உள்ளது.

திமுகவில் காங்கிரஸ், விசிக, மதிமுக உட்பட பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் திமுக 21 தொகுதிகளிலும், 19 தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் ஆரம்பித்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில், இன்று மாலை 6 மணிக்கு, திருநெல்வேலி நாங்குநேரியில் நடைபெற உள்ள பிரச்சாரத்தில் கலந்துக்கொண்டு திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதி திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் தற்போது வரை திருநெல்வேலி தொகுதிக்கான வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது.

இதனால், கூட்டணி கட்சியான திமுக நிர்வாகிகள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாத நிலையில் முதலமைச்சர் இன்று திருநெல்வேலியில் பிரச்சாரத்தை மேற்கொள்வது நிர்வாகிகள் மற்றும் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருநெல்வேலி நாங்குநேரியில் நடக்கும் தேர்தல் பொதுககூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதில் அவர் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியை சேர்ந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரை அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். மாலை பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில் தற்போது வரை காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதனால் திமுகவுக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, இன்று காலைக்குள் வேட்பாளர் அறிவிக்காவிட்டால், திமுக சார்பில் திருநெல்வேலியில் வேட்பாளர் அறிவிக்கப்படும் என எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸ் தலைமைக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இன்று மாலைக்குள் வேட்பாளர் அறிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் திமுக கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளரா அல்லது திமுக வேட்பாளரா என்பதை இரு கட்சி நிர்வாகிகளும் ஆர்வமுடன் உற்று நோக்கி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!