இந்திய கூட்டணி நிலை என்ன? நழுவும் கட்சிகள்!

இந்திய கூட்டணி நிலை என்ன? நழுவும் கட்சிகள்!
X
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்க்கடிப்பதற்காக உருவாக்கிய இந்திய கூட்டணி நிலைமை குறித்து பரிதாபமாக உள்ளது.

வரும் மக்களவை தேர்தலில், பாஜக- வை எப்படியேனும் தோற்கடிக்க வேண்டும் என எண்ணியுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள், 28 கட்சிகளை ஒன்றிணைந்து இந்திய கூட்டணியை உருவாக்கினர். பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட இந்த கூட்டணியில் கம்யூனிஸ்ட், திமுக, சமாஜ்வாதி, திரிணாமூல் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தொடக்கத்தில் இருந்தே கூட்டணி கட்சி தலைவர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்பாடாத நிலையில், பிரதமர் வேட்பாளர், தலைவர், ஒருகிணைப்பாளர் என நிர்வாகிகளை நியமிப்பதிலிருந்து தொகுதி உடன்படிகை வரை பிரச்னைகள் ஏற்பட்டு, பெரிய அளவில் மோதல்கள் வெடித்தன. மேலும் தமிழகத்தில் சானாதன எதிர்ப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது, இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிதிஷ்குமார் இந்தியில் பேசிய போது திமுக தலைவர்களுடன் ஏற்பட்ட உரசல் போன்றவை மோதலை வெளிப்படையாக காட்டியது. இதன் உச்சமாக, கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவை மம்தா பானர்ஜி முன்மொழிந்தார். இந்தியா கூட்டணிக்கு பிரதமர் வேட்டபாளராக தம்மை நியமிப்பார்கள் என நினைத்திருந்த நிதிஷ் குமார், இதனால் கடுமையாக அதிருப்தியடைந்து கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகினார். பின்னர் உடனடியாக பீகாரில், ராஷ்ரிய ஜனதா தளம் கூட்ணியில் இருந்து அதிரடியாக விலகிய முதலமைச்சர் நிதிஷ்குமார், மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். ஆளுநரை சந்தித்து மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இச்சம்பவம் இந்திய கூட்டணி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது ஒரு புறமிருக்க, தொகுதி பகிர்வில் ஏற்பட்ட பிரச்சனையில் மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட போவதாக மம்தா பானர்ஜி அறிவித்து விட்டார். இதே போல் ஆம் ஆத்மியும் தனித்து களம் காண முடிவு செய்து விட்டது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றனர். இந்த தகவலும் இந்தியா கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று தான் சொல்லே வேண்டும். மேலும், உத்தப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராஷ்ரிய லோக் தளம் கட்சியும் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமர் சரண் சிங் பேரனுமான ஜெயவந்த் சவுத்ரி இந்தியா கூட்டணியில் இருந்து பிரிந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். முன்னாள் பிரதமர் சரண் சிங்கிற்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது பேரன் ஜெயவந்த் இந்த முடிவை எடுத்திருப்பதால் விமர்சனங்கள் ஏழுந்துள்ளன.இதுபோன்று இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து நிகழும் எதிர்பார்க்கப்படாத நிகழ்வுகள், திமுகவை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளதாகவும், இதனால் அக்கட்சியின் இந்தியா கூட்டணி செயல்பாடுகளை வெகுவாக குறைத்து விட்டது. நிதி நிர்வாகம் மற்றும் பகிர்வில் உரிமையை மத்திய அரசு பறிப்பதாக திமுக குற்றம்சாட்டி வரும் நிலையில் தென் மாநிலங்களை ஒன்றிணைத்து இயக்க வேண்டும் என்ற முடிவுக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. மாநில அரசுகளின் பொருளாதார உரிமை பாதுகாப்பு என்ற நிலைப்பாட்டில் பாஜகவுக்கு எதிராக தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைத்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியும், சந்திரபாபு நாயுடுவும் அரசியல் ரீதியாக கடுமையாக மோதிக்கொள்ளும் நிலையில் பாஜகவும் கூட்டணி அமைப்பதில் போட்டி போடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மக்களவை தேர்தலையொட்டி பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்றே சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல் இந்திய கூட்டணி தேர்தல் வரை தாங்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!