கூட்டணி குறித்து அமித்ஷா சென்னது என்ன? அண்ணாமலை விளக்கம்..!
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கூட்டணியை அமைப்பதில் அரசியல் கட்சிகள் மும்முராக ஈடுப்பட்டுள்ளன.
இதில் மத்தியில் ஆளும் பாஜக, தமிழகத்தில் அமைக்க உள்ள கூட்டணி குறித்த தகவல்கள் நாள்தோறும் பேசு பொருளாக மாறி வருகின்றன. தமிழகத்தை பெறுத்த வரை தனித்து கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ள பாஜக, அதற்கான கட்சிகளை ஒருகிணைத்து தொகுதிகள் வரை முடிவு செய்துள்ளதாகவுதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணியை முறித்து கொண்டு தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ள அதிமுக, கட்சிகளை இணைந்து கூட்டணி அமைக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, பாஜகவின் மூத்த தலைவர்களை சந்தித்து பேச தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கூட்டணிக்காக பாஜகவின் கதவு எப்போதும் திறந்திருப்பதாக அமித் ஷா கூறியது மீண்டும் பேசு பொருளானது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை இது குறித்து பதில் அளித்துள்ளார்.
பிரதமர் நேரந்திர மோடி தலைமையை ஏற்று யார் வேண்டுமானாலும், தேசிய ஜனநாயக கூட்டகிக்கு வந்தாலும் எங்ககள் கதவு திறந்தே இருக்கு என்று அமித் ஷா தெளிவாக கூறியுள்ளதாக தெரிவித்த அண்ணாமலை, மற்றபடி எந்த கட்சியையும் அவர் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
மேலும் அமித் ஷா சொன்னபடி கூட்டணிk கதவு எல்லோருக்கும் திறந்து இருக்கிறது. ஏன், திமுக கூட்டணியில் இருந்து கூட யார் வேண்டுமானாலும் வரலாம். எத்னையோ கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் யாரையும் வற்புறுத்துப் போவதில்லை. கூட்டணிக்கு வருவதும், வராமல் இருப்பதும் அந்தந்த கட்சிகளின் விருப்பம் எனவே, அமித் ஷா பேசியதை ட்விஸ்ட் செய்யவேண்டாம் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் அரசியல் சூழல்படி, கடைசி நேரத்தில் கூட கூட்டணி அமையலாம். எனவே கூட்டணிக்கு யாரையும் கட்டாயப்படுத்தி இழுக்கப்போவதில்லை. பிரமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைமையை ஏற்கும் கட்சிகள் தேசிய ஜனநாயாக கூட்டணியில் இணையலாம் என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu