புதுச்சேரியில் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
புதுச்சேரி : அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு விபரம்
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி, 5 அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம் மற்றும் அறநிலைத்துறை முதல்வர் ரங்கசாமிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது. துறைமுகம், வக்ஃப் வாரியம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளை முதல்வர் கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் நமச்சிவாயத்திற்கு உள்துறை, மின்சாரம், தொழில் மற்றும் வர்த்தகத்துறை, கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் உள்ளிட்ட துறைகளும் நமச்சிவாயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது. லட்சுமி நாராயணனுக்கு பொதுப்பணித்துறை, சுற்றுலா, மீன்வளத்துறை, சட்டம், தகவல் தொழில்நுட்பம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேனி ஜெயகுமாருக்கு வேளாண், கால்நடை பராமரிப்பு, வனம், சமூக நலன் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைங்கள் நலத்துறையை தேனி ஜெயகுமார் கவனிப்பார் என்றும் தெரிவித்துள்ளனர்.
சந்திரப்ரியங்காவுக்கு போக்குவரத்துக்கு, ஆதிதிராவிடர் நலன், வீட்டுவசதித்துறை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, கலை, கலாச்சாரம், பொருளாதாரம், புள்ளியில் துறையையும் கவனிப்பார். பாஜகவின் சாய் சரவணகுமாருக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Puducherry Minister's Portfolio
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu