இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மத்திய மாநில அரசுக்கு நன்றி தெரிவித்த விஜய்காந்த்
மாணவர்கள் நலன் கருதி நடப்பாண்டே, மருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மத்திய அரசுக்கும், அதற்கு காரணமாக இருந்த மாநில அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோர் (OBC) மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது. நீண்ட சட்ட போராட்டம், அரசியல் கட்சிகள், மாணவர் தரப்பு கொடுத்த அழுத்தம் போன்றவை இதற்கு காரணம் என கருதப்படுகிறது.
எம்பிபிஎஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே இந்த இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று அரசு கூறியுள்ளது.
இதில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்திய சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவை மைல்கல் நடவடிக்கை என்று அழைக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாணவர்கள் நலன் கருதி நடப்பாண்டே, மருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மத்திய அரசுக்கும், அதற்கு காரணமாக இருந்த மாநில அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu