விருதுநகர் தொகுதியில் களம் இறங்கும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்

விருதுநகர் தொகுதியில் களம் இறங்கும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்

விஜய பிரபாகரன்.

விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தேமுதிக வேட்பாளராக களம் இறங்குகிறார்.

விருதுநகர் லோக்சபா தொகுதியில் விஜயபிரபாகரன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் விருப்பமனு பெற்றுள்ளார். விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சிட்டிங் எம்.பி மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக கூட்டணி வேட்பாளராக விஜயபிரபாகரன் அறிமுக வேட்பாளராக களம் காண உள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் கூட்டணி ஒப்பந்தங்கள் மளமளவென கையெழுத்தாகி வருகின்றன. திமுகவும் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட நிலையில் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளது. தேமுதிகவுக்கு விருதுநகர், கடலூர், மத்திய சென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதனிடையே விருதுநகர் லோக்சபா தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட வேண்டும் என்று தேமுதிக நிர்வாகிகள் விரும்பம் தெரிவித்திருந்தனர். திருமங்கலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் விருதுநகர் லோக்சபா தொகுதி வேட்பாளராக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் பெரிய அளவில்லோக்சபா தேர்தலில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை விஜய பிரபாகரன் பெற்றுள்ளார்.

விருதுநகர் லோக்சபா தொகுதியில் தற்போது மாணிக்கம் தாகூர் காங்கிரசில் இருந்து எம்பியாக உள்ளார். இவர் கடந்த லோக்சபா தேர்தலில் 470,883 வாக்குகளை பெற்று வென்றார். இங்கே கடந்த முறை தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி அதிமுக - பாஜக கூட்டணியில் 316,329 வாக்குகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story