தொய்வு ஏற்பட்டிருக்கிறது, ஆனாலும்... விஜயகாந்த் பரபரப்பு அறிக்கை

தொய்வு ஏற்பட்டிருக்கிறது, ஆனாலும்...  விஜயகாந்த் பரபரப்பு அறிக்கை
X

விஜயகாந்த்.

எனது உடல் நிலையில் தொய்வு ஏற்பட்டிருக்கலாம்; தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது என்று, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான்; அதற்காக தேமுதிகவுக்கு எதிர்காலமே இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம்,

தேமுதிகவை விட்டு விலகிச் செல்பவர்கள், இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை உணரும் நாள் வரும். மூளைச்சலவை செய்வோரின் பேச்சு, ஆசை வார்த்தைகளை நம்பி தேமுதிகவை விட்டுச்செல்வது கட்சிக்கு செய்யும் துரோகம் ஆகும்.

அத்துடன், 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது. தேமுதிகவுக்கு எதிர்காலம் இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம். தேமுதிக நிச்சயம் வேரூன்றி இருக்கும். கழகம் வளர்ச்சிப்பாதையை நோக்கி செல்வதற்கு தொண்டர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!