நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் இறங்கும் விஜய் மக்கள் இயக்கம்
நடிகர் விஜய்
ஊரக உள்ளாட்சி தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் அமைப்பை சேர்ந்த 169 பேர் போட்டியிட்டனர். இதில் 110 பேர் வெற்றி பெற்றனர். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இதிலும் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட விஜய் அனு மதி வழங்கிள்ளார்.
இதையடுத்து மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் நேற்று காலை ஆலோசனையில் ஈடுபட் டனர். சென்னை பனையூரிலுள்ள விஜய்யின் அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட் டம் நடைபெற்றது.
அப்போது, எத்தனை இடங்களில் போட்டியிடு வது, யார் யார் தேர்தலில் நிற்பது, எந்த வகையில் பிரசாரத்தில் ஈடுபடுவது என்பது குறித்து கூட்டத் தில் ஆலோசிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட ஆட்டோ சின்னம் ஒதுக்க விஜய் மக்கள் இயக்கம் கேட்டிருந்தது. ஆனால், இந்த சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவதால் எந்த கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பது தேர்தல் முடிவுகளில் தெரியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu