திருச்சி அருகே சிறுகனூரில் நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு

திருச்சி அருகே சிறுகனூரில் நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு
X

விசிக மாநாட்டு மேடையின் முகப்பு தோற்றம்.

திருச்சி அருகே சிறுகனூரில் நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு நடைபெற உள்ளது.

திருச்சி அருகே சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழா மாநாடு நாளை நடைபெறுகிறது.இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை (வெள்ளிக்கிழமை) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வெள்ளிவிழா, கட்சித் தலைவர் திருமாவளவனின் மணிவிழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என்ற பெயரில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது.

நாளை மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த மாநாட்டிற்கு கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.தலைமை தாங்குகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ வரவேற்று பேசுகிறார். பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி.மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார்.

இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க.தலைவரும் ,தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்தியா கூட்டணியில் இடம் பெற்று இருப்பதால் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராஜா, மற்றும் மார்க்சிஸ்ட் லெனினினிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரியும் இதில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது .

முதல்வர் வருகையையொட்டி திருச்சியில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story