மத்தியில் ஆட்சியை நிர்ணயிப்பதில் தொடர்ந்து கோலோச்சி வரும் உத்தரபிரதேசம்

மத்தியில் ஆட்சியை நிர்ணயிப்பதில் தொடர்ந்து கோலோச்சி வரும் உத்தரபிரதேசம்

உத்தரபிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்.

மத்தியில் ஆட்சியை நிர்ணயிப்பதில் தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் கோலோச்சி வருவது மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக உத்தரப்பிரதேச மாநிலம் தொடர்ந்து கோலோச்சி வருகிறது.

18வது மக்களவையை நிர்ணயிப்பதற்காக இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவின்போது பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட தொடங்கியது. தொடர்ந்து சுற்றுகள் வாரியாக முன்னிலை நிலவரங்கள் வந்து கொண்டிருக்கிறது.

மாலை 4 மணி நிலவரப்படி இந்திய அளவில் பாரதிய ஜனதா தலைமையிலான என் டி ஏ கூட்டணி சுமார் 294 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 233 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. இதே நிலை தொடர்ந்தால் பாரதிய ஜனதா கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படலாம்.

பாரதிய ஜனதா கட்சி மட்டும் தற்போது சுமார் 242 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் கூட்டணி கட்சிகளின் பலத்தில் தான் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடிய ஒரு நிலை ஏற்படலாம். இந்தியா கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி தனிப்பட்ட முறையில் 100 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் கூட்டணி பலத்துடன் அவர்களும் ஆட்சி அமைக்க முயற்சிக்கலாம். ஆனால் சிங்கிள் மெஜாரிட்டி பார்ட்டி என்ற அடிப்படையில் பாரதிய ஜனதாவிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதால் பாரதிய ஜனதா கட்சியானது பிரதமர் மோடி தலைமையில் தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.

தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளில் எல்லாம் அகில இந்திய அளவில் ஊடகங்கள் பாரதிய ஜனதா மீண்டும் 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று கூறிவந்தன. ஆனால் அந்த கருத்து கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி இருக்கிறார்கள் வாக்காளர்கள்.

இந்தியாவில் தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் தான் மிகப்பெரிய மாநிலமாக உள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள மொத்த நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 80 .இம்மாநிலத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 73 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை பாரதிய ஜனதா கட்சி இதுவரை 36 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் 43 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.

தனிப்பெரும் கட்சியாக வந்து மீண்டும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பாரதிய ஜனதாவின் ஆசையில் மண் விழுந்து உள்ளது என்றால் அதற்கு முழு காரணம் உத்தரப்பிரதேச மாநில வாக்காளர்கள் தான். நாட்டின் பெரிய மாநிலமாக இருப்பதால் உத்தரப் பிரதேச மாநில மக்கள் எடுக்கும் முடிவே மத்திய அரசில் யார் ஆட்சியில் அமர வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளார்கள்.

இது இன்று நேற்று அல்ல பல ஆண்டுகளாக இதே நிலைதான் நீடித்து வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் யார் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்கிற இந்த நிலை தான் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போதைய தேர்தலிலும் உத்தர பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு சுமார் 30 தொகுதிகள் துண்டு விழுகிறது. இந்த இடைவெளியை வழங்கியவர்கள் உத்தரபிரதேச மாநில வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் தொடர்ந்து மத்தியில் யார் ஆட்சி அமைக்க முடியும் என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கி வருகிறது. அது இந்த தேர்தலிலும் தொடர்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்பட்ட சறுக்கலுக்கு முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தின் வலுவான சமாஜ்வாடி கட்சியுடன் ஏற்படுத்திய கூட்டணி தான்.

Tags

Read MoreRead Less
Next Story