புகழ்ந்து பேசிய எம்.எல்.ஏ - ஆஃப் செய்த முதல்வர் ஸ்டாலின்

புகழ்ந்து பேசிய எம்.எல்.ஏ - ஆஃப் செய்த முதல்வர் ஸ்டாலின்
X
கேள்வி நேரத்தை அதற்காக மட்டும் பயன்படுத்துங்கள். என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்

கேள்வி நேரத்தை அதற்காக மட்டும் பயன்படுத்துங்கள். என்னை புகழ்வதற்கோ, பெருமைப்படுத்தி பேசுவதற்கோ பயன்படுத்த வேண்டாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியதும் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது பேசிய ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகய்யா, முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். அப்போது பேசிய முதல்வர் முக ஸ்டாலின், கேள்வி நேரத்தை அதற்காக மட்டும் பயன்படுத்துங்கள் ; என்னை புகழ்வதற்கோ, பெருமைப்படுத்தி பேசுவதற்கோ பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி தெரிவித்தார்.

கேள்வி நேரத்தை அடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். விவாதம் முடிந்ததும் மானியக் கோரிக்கை மீது பதில் அளித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது

Next Story
ai healthcare products