தமிழகத்தில் பிப். 19ல் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
![தமிழகத்தில் பிப். 19ல் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் பிப். 19ல் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்](https://www.nativenews.in/h-upload/2022/01/26/1463435-ec-01.webp)
தமிழகத்தில், கடந்த 2019 டிசம்பரில், 24 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. புதியதாக உருவான ராணிப்பேட்டை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் மட்டும் அப்போது, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், 2021 அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில், எஞ்சிய 9 மாவட்டஙகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றன.
இதை தொடர்ந்து, 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியது. இதனிடையே, கொரோனா 3-வது அலையை காரணம் காட்டி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என நேற்று உத்தரவிட்டது.
![](https://www.instanews.city/h-upload/2022/01/26/1463436-election-01.webp)
அதன் தொடர்ச்சியாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில், தேர்தல் ஆணையர் பழனிகுமார், உள்ளாட்சி தேர்தல் தேதி அட்டவணையை வெளியிட்டார். அதன் விவரம்:
வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28 முதல் பிப்.4, ம் தேதி வரை
வாக்குப்பதிவு : 19.02.22
வேட்பு மனு பரிசீலனை 05.02.22
வேட்பு மனு திரும்ப பெற 07.02.22
வாக்கு எண்ணிக்கை 22.02.22
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu