திருச்சி ஓ.பி.எஸ். மாநாட்டின் பின்னணியில் திமுக: திருப்பு முனை ஆசை நிறைவேறுமா?
OPS Trichy Manadu-திருச்சியில் நாளை ஓ.பி.எஸ். நடத்த இருக்கும் மாநாட்டின் பின்னணியில் தி.மு.க. இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாநாடு அவரது ஆசை நிறைவேற்றுமா என்ற கேள்வியும் எழுப்பி உள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பின்னர் சசிகலா முதல்வர் ஆவதற்கு முயற்சி செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கில் அடைந்த தண்டனையால் அந்த வாய்ப்பு அவரை விட்டு பறிபோனது. சசிகலா சிறைச்சாலைக்கு செல்வதற்கு முன்னர் எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வர் ஆக்கிவிட்டு சென்றார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தனது ராஜதந்திரத்தால் சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் தலையீட்டை ஒதுக்கிவிட்டு அ.தி.மு.க.வை தன் பக்கம் திருப்பினார்.
இதற்கு இடையூறாக ஓ. பன்னீர் செல்வம் செல்வம் இருந்த வந்ததால் அ.தி.மு.க.வில் ஒன்றை தலைமை விவகாரம் விசுவரூபம் எடுத்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி -ஓ பன்னீர்செல்வம் இடையே நேரடி முதல் ஏற்பட்டு கட்சி உடைந்தது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்தி ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கினார். மேலும் தான் இடைக்கால பொதுச் செயலாளராகவும் அந்த கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்.
இந்த பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தை நாடினார்கள். நீதிமன்ற தீர்ப்புகள் மாறி மாறி வந்த நிலையில் இறுதியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என அறிவித்தது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க .பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்திருப்பதுடன் இரட்டை இலை சின்னத்தையும் அவர்களுக்கு வழங்கியுள்ளது.
இதன் காரணமாக ஓ. பன்னீர்செல்வம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த பின்னடைவில் இருந்து மீள்வதற்காக திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் நாளை ஓ. பன்னீர்செல்வம் அணியினரின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு திருப்புமுனை ஏற்படுத்தும் தொண்டர்கள் லட்சக்கணக்கில் குவிவார்கள் என்று ஓபிஎஸ்சும், அவரது ஆதரவாளர்களும் கூறி வருகிறார்கள்.
இந்த மாநாட்டில் வி. கே. சசிகலா கலந்து கொள்வார் என முதலில் பரபரப்பாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் மாநாட்டிற்கு வருவதாக இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இது ஓ.பி.எஸ். தரப்பிற்கு மீண்டும் பின்னடவை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் திருச்சியில் எந்த அரசியல் கட்சி மாநாடு நடத்தினாலும் திருப்பு முனை ஏற்படுத்தும் என ஒரு வரலாறு இருந்து வருகிறது.
ஆனால் அ.தி.மு.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த சூழலில் ஓ.பி.எஸ். நடத்தும் இந்த மாநாடு அவருக்கு திருப்புமுனையை தருமா கட்சியை மீண்டும் கைப்பற்ற முடியுமா? என்ற நிலையில் அவரது ஆசை நிறைவேறுமா என தெரியவில்லை.
அ.தி.மு.க. கட்சியின் முக்கிய மாவட்ட செயலாளர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர். எம். எல். ஏ. க்களும் அவரது பணியில் தான் உள்ளனர். ஓ.பி.எஸ். தொண்டர்கள் மட்டுமே தன்னிடம் இருப்பதாக கூறி வருகிறார். ஒன்றரை கோடி தொண்டர்களும் மாநாட்டிற்கு வருவார்களா? என்று தெரியவில்லை.
ஓ.பி.எஸ். நடத்தும் மாநாட்டின் பின்னணியில் ஆளும் கட்சியான தி.மு.க. உள்ளது. ஆளும் கட்சியான தி.முக..வின் ஆதரவு மற்றும் தொண்டர்களுக்கு பணம் கொடுப்பதன் காரணமாக தொண்டர்கள் அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு இடையில் கோடை வெப்பத்தை தவிர்க்கும் வகையில் மழையும் ஓ.பி.எஸ்.சை மிரட்டி வருகிறது. அந்த வகையில் நாளை விடிந்தால் தான் ஓ.பி.எஸ். மாநாடு வெற்றி பெறுமா அவரது ஆசை நிறைவேறுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu