திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
X

எம்.ஜி.ஆர்.

திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

அ.தி.மு.க. நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நாள் விழா ஜனவரி 17ம் தேதி தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் அறிவுறுத்தலின்படி கழக நிறுவனத் தலைவர், தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107-வது ஆண்டு பிறந்த நாளை (17.1.2024, புதன்கிழமை) முன்னிட்டு கீழ்க்கண்ட இடங்களில் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைகளுக்கும் மற்றும் சிலைகள் இல்லா இடங்களில் திருவுருவப் படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கப்படும்.

17.1.2024, புதன்கிழமை

காலை 9மணி- சோமரசம்பேட்டை

காலை 9.30மணி- குழுமணி

காலை 9.45மணி- ஜீயபுரம்

காலை 10.15மணி- பெட்டவாய்த்தலை (சிறுகமணி நகரம்)

காலை 10.30மணி- தேவஸ்தானம்

காலை 11மணி- முசிறி கைக்காட்டி

காலை 11.30மணி - துறையூர்

காலை 11.45 - கரட்டாம்பட்டி

மதியம் 12மணி- மண்ணச்சநல்லூர்

கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே எம்.ஜி.ஆர் அவர்களின் திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story