/* */

திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ என அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
X

திருச்சி நாடாளுமன்ற தொகுதி ஒப்பந்தத்தின்போது திமுக தலைவர் ஸ்டாலின் -மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் திமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றிற்கு ஏற்கனவே தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீடு இன்று தான் முடிவடைந்தது.

இதனை தொடர்ந்து திருச்சி நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் கையெழுத்திட்டு உள்ளனர்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை ஏற்கனவே கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் சுமார் 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இம்முறையும் தனக்கு சீட் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். ஆனால் திருச்சியில் காங்கிரசார் அவருக்கு சீட் கொடுக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டின் போது திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. திருச்சிக்கு பதிலாக மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த ஒரே தொகுதியில் வைகோவின் மகனும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ போட்டியிடுவார் என ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

துரை வைகோ ஏற்கனவே வைகோ கடந்த 2003 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் இருந்து சென்னை வரை நடை பயணம் மேற்கொண்ட போது அவரது நடை பயணத்தை ஒருங்கிணைத்து நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தான் முதல்முறையாக அவர் தேர்தல் களத்தை சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் மதிமுக விற்கு திருச்சி ஒதுக்கப்படுவது இது இரண்டாவது முறை ஆகும். ஏற்கனவே கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலின் போது மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த எல். கணேசன் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் அல்ல மதிமுக தொடங்கப்பட்ட பின்னர் முதல் மாநில மாநாடு நடைபெற்ற இடமும் திருச்சி தான். மதிமுகவின் முக்கிய முடிவுகள் பலவும் திருச்சியில் தான் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 March 2024 2:57 PM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...