திருச்சியில் தமிழ் தேசிய கூட்டணி சார்பில் முப்பெரும் விழா
திருச்சி மரக்கடையில் தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் பிரபாகரன் பிறந்தநாள், பெரியார் சாதியை பாதுகாக்கும் சட்ட பிரிவை எரித்த நாள்,அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் வகுத்த நாள் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.இதில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மாவட்டசெயலாளர் ராயல் சித்திக் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் முகமது தாஹா, மே பதினேழு இயக்கம் சுந்தரமூர்த்தி, ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமை தாங்கிபேசியதாவது:-
சாதியை ஒழித்தால்தான் வல்லான்மை பொருந்தியனவாக தமிழன் வருவான் என்று கூறிய பெரியாரின் முழக்கம் தான் தமிழகத்தில் பெரிய முழக்கமாக கடந்த நூற்றாண்டில் ஒலித்தது. திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணை ப்பாளர் சீமான் கூறு வது ஏற்புடையது அல்ல.இதன் மூலம் அவர் கூறுவது இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும்.சாதியை காப்பாற்ற வேண்டும், சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வது தவறுஇல்லை, ஆரிய பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று சொல்கிறார். இதை அனைத்தையும் ஆதரிக்கி றார் என்றுதான் அர்த்தம். தமிழ்த்தேசிய கூட்டணியில் பல்லாயிரயிக்கணக்கான இளைஞர்கள் சேர வேண்டும் இந்த அரசியலில் வலிமையாக மாற்றி தமிழகத்தின் அரசியல் எதிர் காலத்தை நாம் முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேர வை,விடுதலைச் சிறுத்தை கள் கட்சி,தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழர் விடியல் கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சி, தமிழ் மீனவர் விடுதலை வேங்கை கள், அகில இந்திய பார்வா ர்ட் ப்ளாக், தேவேந்திரகுல மக்கள் முன்னேற்றப் பேர வை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் சிறப்புரையாற்றினர்
.இந்த விழாவின் ஒரு பகுதியாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டு அவர் தலைமையில் மேடையில் ஒருதம்பதிக்கு சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைத்தார். இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் தமிழகமக்கள் ஜனநாயக கட்சி தொழிற்சங்க மாவ ட்ட செயலாளர் டேவிட் ஆரோக்யராஜ் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu