ஸ்மார்ட்சிட்டி திட்டபணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும்-அமைச்சர்
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், கே.என்.நேரு
திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முழுவதும் வரும் 2023 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் தமிழக அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாநகராட்சியில் துணை நகரங்கள் அமைக்கும் திட்டம் குறித்து சட்டமன்ற கூட்டதொடரில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என நெல்லையில் ஆய்வு மேற்கொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே . என். நேரு திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஆய்வு செய்தார். மாநகரப் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள 10 பேருந்து நிறுத்தங்களை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். பாளையங்கோட்டை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார்.
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்...
நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் நடைபெறவுள்ள தேர்தல்களில் போட்டியிடும் பதவிக்கு இன சுழற்சி முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் வார்டு வரையறை முடிக்கபட்டு நகர் புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. என 2018 ம் ஆண்டு முந்தைய ஆட்சியாளர்கள் தெரிவித்த நிலையில் அதன் மீது பல்வேறு புகார் வந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து புகார்களையும் சரிசெய்யப்பட்ட பின்னர் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும். நெல்லை மாநகராட்சியில் 895.52 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகிறது . 161 கோடி மதிப்பிலான பணிகள் நிறைவு பெற்றுள்ளது.698.10 கோடி மதிப்பிலான பணிகள் நடந்து வருகிறது. 296.11 மதிப்பிலான பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது.தற்போது வரை 60 சதீவீத பணிகள் முடிவடைந்துள்ளது.
நெல்லை மாநகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்கும் மூன்றாவது கட்ட பணிகள் செய்யும் ஒப்பந்தாகரர் முறையாக பணியை செய்யாமல் இருந்து வருகிறார். ஒப்பந்தாகாரர் குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடிக்காவிட்டால் ஒப்பந்தகாரரை மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்படும். 230 கோடி திட்டமதிப்பில் நடந்து வரும் மாநகராட்சியின் குடிநீர் திட்டபணிகள் 91% முடிவடைந்துள்ளது.
செப்டம்பர் மாத இறுதியில் பணிகள் அனைத்தும் முடிவுபெற்று மக்கள் பயன்பாட்டுக்கு வரும், நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முழுவதும் வரும் 2023 மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் கடந்த ஆட்சியில் தொடங்கபட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டபணிகள் அனைத்து எம்.ஜி.ஆர் பெயரிலேயே தொடங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் அனைத்தும் கிராமபுறத்தை நோக்கியே உள்ளது.
நகர் புறங்களில் ஜல்ஜீவன் திட்டம் இப்போது தான் அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாநகராட்சியில் ஜல்ஜிவன் திட்டத்துக்கான வரையறை வகுக்கபட்டுள்ளது. மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டால் நகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு ஓர் ஆண்டுக்குள் வழங்கப்படும். தமிழக அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாநகராட்சியில் துணை நகரங்கள் அமைக்கும் திட்டம் குறித்து சட்டமன்ற கூட்டதொடரில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார்.
அதனை தொடர்ந்து அந்த திட்டங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறும் சட்டமன்ற கூட்டதொடரில் புதிய மாநகராட்சி,நகராட்சி குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.அதனை தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கி இந்தாண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா, சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப் , மார்க்கண்டேயன் , முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் விஷ்ணுசந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu