அதிமுகவை அதிர வைத்த திருநெல்வேலி..! காங்கிரஸ் முதலிடம்..! அடுத்தது பாஜக..!
பாஜகவுடன் நேரடியாக மோதிய காங்கிரஸ் தொகுதிகளில் திருநெல்வேலி தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில் அதிமுகவிலிருந்து பிரிந்து போன நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் போட்டியிட்டதால், அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது. மேலும் அவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினராகவும் பாஜக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கிறார். இதன்காரணமாக திருநெல்வேலி தொகுதியில் இவர் ஜெயிக்க வாய்ப்பிருப்பதாகவே கூறப்பட்டது. ஆனால் நிலைமை தலைகீழாக காங்கிரஸ் கட்சியின் ராபர்ட் புரூஸ் முன்னிலைக்கு வந்துள்ளார்.
பாஜகவின் பணபலம், ஆள்பலத்துக்கு முன் காங்கிரஸ் கட்சியின் ராபர்ட் புரூஸ் ஏற்கனவே கோஷ்டி பூசல் காரணமாக போதிய அளவில் உள்ளூர் கட்சி ஆதரவு இன்றி களத்தில் இறங்கினார். கடைசி நேரத்தில்தான் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையிலும் கூட்டணி கட்சியின் ஆதரவால் பிரச்சாரத்தை மிகவும் தீவிரமாக முன்னெடுத்தனர். திமுகவினர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான பிரச்சாரத்தை விட மோடிக்கு எதிரான பிரச்சாரத்தையே முன்னிலைப்படுத்தினர். அதுமட்டுமின்றி, காங்கிரஸின் கணக்குகளை முடக்கியதால் பணபலமும் திமுக சார்பில் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட அனைத்து இடங்களிலுமே திமுகவினர் இறங்கி வேலை பார்த்தனர்.
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் இருக்கும் சட்டமன்ற தொகுதிகள் ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகும். இதில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதிகளில் பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கூறப்பட்டது. அதேநேரம் ராதாபுரம், நாங்குநேரி பகுதிகளில் ராபர்ட் புரூஸுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகவும் கூறப்பட்டது. அதேநேரம் ஆலங்குளம், ராதாபுரம், நாங்குநேரி பகுதிகளில் பாஜகவுக்கும் அதிக செல்வாக்கு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனால் யார் வெற்றி பெறுவார் என்பது இழுபறியாகவே தொடரும் என்று கணிக்கப்பட்டது.
1 மணி நிலவரப்படி, 168079 வாக்குகளைப் பெற்று 52,574 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார் திமுக ஆதரவு காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ். அவருக்கு அடுத்த இடத்தில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 505 வாக்குகள் பெற்று நயினார் நாகேந்திரன் இடம்பிடித்திருக்கிறார். இந்த தொகுதியில் இறுதிவரை இவருக்கும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று கருதப்படுகிறது.
காங்கிரஸ் வேட்பாளரான ராபர்ட் புரூஸ், பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரன் ஆகியோரிடையே இந்த போட்டி எப்போது வேண்டுமானாலும் தலைகீழாக மாற வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளரான ஜான்சி ராணி வெறும் 30 ஆயிரம் வாக்குகள்தான் பெற்றிருக்கிறார். காங்கிரஸ், பாஜக, நாதகவைத் தொடர்ந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது அதிமுக.
1.30 மணி நிலவரப்படி, 175381 வாக்குகளைப் பெற்று 53,757 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார் திமுக ஆதரவு காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ். அவருக்கு அடுத்த இடத்தில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 624 வாக்குகள் பெற்று நயினார் நாகேந்திரன் இடம்பிடித்திருக்கிறார்.
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி நிலவரம்:
வேட்பாளர்கள் | நிலை | வாக்குகள் | வித்தியாசம் |
ராபர்ட் புரூஸ் (காங்கிரஸ்) | முன்னிலை | 175381 | +53,757 |
நயினார் நாகேந்திரன் (பாஜக) | பின்னடைவு | 121624 | -53,757 |
சத்யா (நாம் தமிழர்) | பின்னடைவு | 35518 | ( -139863) |
ஜான்சி ராணி (அதிமுக) | பின்னடைவு | 32198 | ( -143183) |
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu