தி.மு.க.வில் இந்த 4 எம்.பி.க்களுக்கும் மீண்டும் போட்டியிட சீட் இல்லை

தர்மபுரி செந்தில்குமார் எம்பி.
ததிமுக வேட்பாளர் பட்டியலை இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதில் தர்மபுரி எம்பி செந்தில் குமார் உள்பட 4 சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். காங்கிரஸ் மட்டுமே வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இன்று காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் முக ஸ்டாலின் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இந்த வேட்பாளர் பட்டியலில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன், தென்காசி (தனி) தொகுதியில் ராணி சிவக்குமார் என மூன்று பெண் வேட்பாளர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது.
வேட்பாளர் பட்டியலில் தற்போது சிட்டிங் எம்.பிக்களாக இருக்கும் 4 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தர்மபுரி தொகுதி எம்பியாக இருக்கும் செந்தில் குமார், கள்ளக்குறிச்சி தொகுதியில் எம்பியாக இருக்கும் பொன்முடி மகன் கவுதம சிகாமணி, சேலம் பார்த்திபன், தஞ்சையில் 6 முறை எம்பியாக இருந்த பழனி மாணிக்கத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு பதிலாக கள்ளக்குறிச்சி தொகுதியில் மலையரசன், தர்மபுரி தொகுதியில் ஆ மணி, சேலம் தொகுதியில் செல்வ கணபதி, தஞ்சை தொகுதியில் முரசொலி ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திமுக சிட்டிங் எம்பிக்கள் 4 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu