/* */

‘திராவிட சிந்தனையாளர்களின் கையில் எதிர்காலம்’-கனிமொழி எம்.பி. பேச்சு

திராவிட சிந்தனையாளர்களின் கையில் தான் எதிர்காலம் உள்ளது என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

HIGHLIGHTS

‘திராவிட சிந்தனையாளர்களின் கையில் எதிர்காலம்’-கனிமொழி எம்.பி. பேச்சு
X

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற வினாடி வினா தொடக்க நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசினார்.

எதிர்காலம் திராவிட இயக்கச் சிந்தனைகள் உள்ளவர்களிடம் இருக்கும் என கனிமொழி கருணாநிதி எம்.பி பேசினார்.

தி.மு.க. மகளிர் அணி சார்பில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னெடுப்பில் நடைபெறும் 'கலைஞர் 100 வினாடி வினா' போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்டம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் மஹாலில் இன்று (30/11/2023) துவங்கியது.

கலைஞர் 100 வினாடி வினா' போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டியை தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. துவக்கி வைத்து, போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு, விருதுநகர் தெற்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்வில் கனிமொழி எம்.பி பேசும்போது இன்று நடைபெற்று இந்த நிகழ்ச்சி மனதிற்கு மகிழ்ச்சியையும், நிறைவைத் தரக்குடிய ஒன்றாக இருந்தது. இந்த போட்டியில் பங்கேற்பாளர்களின் உழைப்பு, முயற்சிகளை காணும்போது, எதிர்காலம் திராவிட இயக்கச் சிந்தனைகள் உள்ளதாகவும், தமிழ் பெருமையும், வரலாற்றையும் புரிந்து கொண்டுள்ள நமது பிள்ளைகளின் கையில் இருக்கப் போகிறது என்ற நல்ல நம்பிக்கையை எங்களுக்கு தந்துள்ளது. இரண்டு இலட்ச போட்டியாளர்களைக் கொண்டுள்ள இந்த போட்டியில், இந்த சுற்றுவரை வந்துள்ள அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமார், மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி எம்.எல்.ஏ, இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண்கள் பெறும் குழுக்கள் மண்டல சுற்றுக்கு முன்னேறுவார்கள். இது ஒரு குழு வினாடி வினா போட்டியாக இருக்கும், ஒரு குழுவில் மூன்று நபர்கள் பங்குபெறுவர். கலைஞர் 100 வினாடி வினா போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டிகள், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உள்ளடக்கிய 12 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, இரு பிரிவினருக்கும் தனித்தனியே நடைபெறும் இப்போட்டி மொத்தம் 5 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண் எடுத்த ஒரு குழு என, 39 குழுக்கள் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டியில் பங்குபெறுவர்.

மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டி துவக்க விழாவில், விருதுநகர் மண்டலத்தில் (விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்) ஆகிய மாவட்ட குழுக்கள் பங்கேற்றனர். 18 வயதிற்கு மேற்பட்டோர் காண போட்டியில் சிவகங்கை அணி வெற்றிபெற்றது, இந்த குழுவில் மோகன், அறிஷேவர், பிரபு ஆகியோர் பங்கேற்றனர். 18வயதிற்கு உட்பட்டோர் காண போட்டியில் சிவகங்கை அணி வெற்றிபெற்றது, இந்த குழுவில் குகன், சிவசங்கர், குணால் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர்.

அரையிறுதியின் வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். இரு பிரிவுகளிலும் இறுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரு பிரிவுகளிலும் 2ஆம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரு பிரிவுகளிலும் மூன்றாமிடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும். வெவ்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்.

Updated On: 30 Nov 2023 11:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.