சினிமாவில் நடித்த விஜயகாந்த் அரசியலில் நடிக்காததால் வந்த மக்கள் வெள்ளம்
கேப்டன் விஜயகாந்த்.
தே.மு.தி.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடலுக்கு விடிய விடிய திரைப் பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக, விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் எடுத்துச் செல்லப்பட்டது.
மதியம் 1 மணியளவில் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு சென்றது. பின்னர் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலக வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
தீவுத்திடலிலும் விஜயகாந்த் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டு இருந்தனர். தன்னை வீழ்த்த நினைக்கிறார்கள் என்று தெரிந்தும், அடிபணிந்து போனால் நன்றாக இருக்கலாம் என தெரிந்தும், என்ன ஆனாலும் சரி பின் வாங்க மாட்டேன் அடிபணிய மாட்டேன் என்ற துணிச்சல் தான் விஜயகாந்தை மக்கள் கொண்டாடுவதற்கு காரணம். சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் கூட அடித்தால் திருப்பி அடிப்பேன் யாராக இருந்தாலும் சரி என செயலில் காட்டியதோடு சினிமாவில் தான் நடிகனே தவிர அரசியல் மேடையில் எனக்கு நடிக்க தெரியாது என்பதை நிரூபித்து காட்டியவர் விஜயகாந்த். அதனால் தான் சூழ்ச்சி நிறைந்த அரசியலில் அவரால் நிலைத்த வெற்றியை பெறமுடியவில்லை என்பது மட்டும் அல்ல, பெற்ற வெற்றியையும் தக்க வைக்க முடியாமல் போனது.
பொதுவாக பத்திரிகையாளர்கள் எல்லோரையும் கேள்வி கேட்டு திணறடிப்பார்கள். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் அடக்கி வாசிப்பார்கள். பிற அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்பது போல் கேட்பதற்கு ஒருவருக்குக்கூட தைரியம் இருந்ததில்லை. ஆனால் நான் பெரிய பத்திரிகையாளன் என்று கம்பு சுத்துவார்கள். அப்படிப்பட்ட செய்தியாளர்கள் ஒரு சிலர் விஜயகாந்தை மடக்கி கேள்வி கேட்டபோது ஜெயலலிதாவிடம் இப்படி கேட்க முடியுமா?. பத்திரிகையாளர்களா நீங்க.. த் ..தூ …என கேட்டு காரி துப்பினார்.
கேள்வி கேட்கவே துணிச்சல் இல்லாத வன்மம் பிடித்த சிலர் அதை வைத்து அவரை தொடர்ந்து மட்டம் தட்டினர். இப்போது விஜயகாந்த் க்கு வரும் கூட்டத்தை பார்த்தால் அவர் துப்பியது தவறே இல்லை என்பது தெளிவாகி விட்டது. அதே வாய்கள் இப்போது பாராட்டி பேசுகிறது அதே கைகள் இப்போது பாராட்டி எழுதுகிறது என்றால் அதற்கு சினிமாவில் மட்டுமே நடித்த விஜயகாந்திற்கு அரசியல் மேடையில் நடிக்க தெரியாத நல்லவராக விஜயகாந்த் இருந்தார் என்பதற்காக மட்டும் தான்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu