நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் ஆதரவு யாருக்கும் இல்லையாம்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் ஆதரவு யாருக்கும் இல்லையாம்
X

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் ஆதரவு யாருக்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்று விஜய் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடைகால வெயிலுக்கு நிகராக நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரமும் அனல் கக்கி வருகிறது. பிரதமர் மோடி, இந்தியா கூட்டணி தலைவர் ராகுல் காந்தி உட்பட அகில இந்திய தலைவர்கள் தமிழகத்தை நோக்கி தேர்தல் பிரச்சாரத்திற்காக படை எடுக்க தொடங்கி விட்டார்கள். காரணம் தமிழகத்தில் ஒரே கட்டமாக அதுவும் முதல் கட்ட தேர்தலில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பது தான்.

தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளன. இதன் காரணமாக தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. தமிழகத்தில் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி ஒரு அணியாகவும், அதிமுக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், பாஜக பாமக கட்சிகள் ஒரு அணியாகவும் ,நாம் தமிழர் கட்சி தனியாகவும் என நான்கு முனை போட்டி நிலவுகிறது பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிட்டாலும் இந்த நான்கு கட்சி வேட்பாளர்களுக்கு இடையே தான் போட்டி கடுமையாக உள்ளது .

இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரிவினை ஏற்படுத்தும் திராவிட கட்சிகளை ஆதரிக்காதீர்கள் நாட்டை பலப்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் தேசிய கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என விஜய் கையெழுத்திட்ட ஒரு செய்தி பரவியது.

இது போலியான செய்தி என இப்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் எங்களது இலக்கு அடுத்த சட்டமன்ற தேர்தல்தான் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் யாருக்கும் வாக்களியுங்கள் அளிக்கக்கூடாது என எதுவும் சொல்லவில்லை விஜய் பெயரில் வெளியான அறிக்கை போலியானது. தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் இதனை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business