முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ரவி திடீர் அழைப்பு

முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ரவி திடீர் அழைப்பு
X
முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ரவி திடீர் என நேரில் சந்தித்து பேச அழைப்பு விடுத்துள்ளார்.

நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக பேசுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி உள்ளார் அவருக்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கும் நீண்ட காலமாக கருத்து மோதல்கள், பிரச்சினைகள் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தமிழக சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது மரபு.

ஆனால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காததால் நீட் தேர்வு விலக்கு மசோதா உட்பட பல மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் முக்கியமான சில மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியதால் தமிழக சட்டமன்றத்தில் அதற்காக ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்தி மீண்டும் மசோதாவாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஆளுநரின் செயல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 1ம் தேதி நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர் , முதல்வரை அழைத்து பேசி தீர்வு காணலாம் என வழக்கை முடித்து வைத்தது. இதன் காரணமாக உச்சநீதிமன்ற அறிவுரைப்படி ஆளுநர் ஆர். என். ரவி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தகவல் அனுப்பியுள்ளார். நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக பேசுவதற்கு நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் சென்னையில் தற்போது புயல் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் நடந்து வருவதால் அந்த பணிகள் முடிந்த பின்னர் சந்திப்பது தொடர்பாக நேரம் ஒதுக்கப்படும் என முதலமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியோ உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சனை ஒரு முடிவுக்கு வர இருக்கிறது என்பது தமிழக மக்களுக்கு ஒரு வகையில் சந்தோசம் தான்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!